பிளாஷ்பேக்: லதா மங்கேஷ்கர் பாடலை புறக்கணித்த தமிழ் சினிமா | படத்தின் பட்ஜெட் தொகையை இசை உரிமை விற்றதில் திரும்பப் பெற்ற 'சாயரா' | பவன் கல்யாணுக்கு நன்றி சொன்ன கங்கனா ரணாவத் | பிளாஷ்பேக்: ஈர்ப்புள்ள பாரதியாரின் பாடல்களும், இணையற்ற ஏ வி எம்மின் “நாம் இருவர்” திரைப்படமும் | கமலை சந்தித்த 'உசுரே' படக்குழுவினர்: பிக்பாஸ் பாசத்தில் ஜனனி ஏற்பாடு | 'மிஸ்டர் ஜூ கீப்பர், அடங்காதே' இந்தமுறையாவது சொன்னபடி வெளியாகுமா? | வடிவேலுக்கு இந்த நிலையா?: மாரீசன் காட்சிகள் ரத்தான பரிதாபம் | திருமணம் எப்போது? விஜய்தேவரகொண்டா பதில் இதுதான் | சினிமாவில் இது தான் எதார்த்தம் : திரிப்தி டிமிரி | சோசியல் மீடியாவில் விமர்சிக்கப்படும் சாய்பல்லவியின் சீதா தேவி கதாபாத்திரம்! |
மலையாள திரையுலகில் நடிகராக மட்டும் இல்லாமல் ஒரு தயாரிப்பாளராகவும் படங்களை தயாரிப்பதுடன் விநியோகமும் செய்து வருகிறார் பிருத்விராஜ். இந்த நிலையில் தற்போது பிருத்விராஜ், மோகன்லால் படங்களை தொடர்ந்து தயாரிக்கும் ஆண்டனி பெரும்பாவூர், மம்முட்டியின் ஆஸ்தான தயாரிப்பாளராக கருதப்படும் ஆன்டோ ஜோசப் மற்றும் தயாரிப்பாளர் மேஜிக் பிரேம்ஸ் லிஸ்டின் ஸ்டீபன் ஆகியோருக்கு சொந்தமான மொத்தம் 50 இடங்களில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தியுள்ளனர். வியாழக்கிழமை காலை 7.30 மணிக்கு துவங்கிய இந்த ரெய்டு வெள்ளி அதிகாலை4.30 மணிக்குத்தான் முடிந்துள்ளது.
கேரளாவில் மட்டுமல்லாமல் இவர்களுக்கு சென்னை மற்றும் மும்பையில் சொந்தமாக இருக்கும் இடங்களிலும் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதில் சில முக்கிய டிஜிட்டல் ஆவணங்கள் வருமானவரித் துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த திடீர் ரெய்டு மலையாள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தினாலும், இது வழக்கமாக நடத்தப்படும் சோதனைதான் என்று சம்பந்தப்பட்டவர்கள் தரப்பிலிருந்து சொல்லப்படுகிறது.