எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
தெலுங்கின் முன்னணி நடிகர் என்.டி.பாலகிருஷ்ணாவின் புதிய படம் பூஜையுடன் நேற்று தொடங்கியது. படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. என்பிகே 108 என்று தற்காலிக தலைப்பு வைத்துள்ளனர். இது அவரது 108வது படமாகும்.
தெலுங்கு முன்னணி இயக்குநரான அனில் ரவிபுடியின் இயக்கத்தில் தயாராகும் இந்த படத்திற்கு. சி.ராம் பிரசாத் ஒளிப்பதிவு செய்ய, எஸ். தமன் இசையமைக்கிறார். ஷைன் ஸ்க்ரீன்ஸ் நிறுவனத்தின் சார்பில் சாஹூ கரபதி மற்றும் ஹரிஷ் பெடி ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.
இந்த படத்தின் தொடக்க விழா ஐதராபாத்தில் நடைபெற்றது. தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் கிளாப் போர்டு அடிக்க, பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு கேமராவை ஆன் செய்து படப்பிடிப்பை தொடங்கி வைத்தார். முதல் காட்சிக்கு பிரபல இயக்குநர் கே. ராகவேந்திரா ராவ் கவுரவ இயக்குநராக பணியாற்றினார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த நவீன் யெர்னேனி, கிலாரு சதீஷ் மற்றும் தயாரிப்பாளர் சிரிஷ் ஆகியோர் படத்தின் திரைக்கதையை தயாரிப்பாளரிடம் ஒப்படைத்தனர்.
இதன் படப்பிடிப்பு, சண்டை காட்சிகளுடன் தொடங்கியது. கலை இயக்குநர் ராஜீவன் மேற்பார்வையில் பிரம்மாண்டமான அரங்கம் அமைக்கப்பட்டு, சண்டைக் காட்சிகள் படமாக்கப்படுகிறது. இந்தப் படத்தில் இதுவரை திரையில் தோன்றிராத புதிய தோற்றத்தில் பாலகிருஷ்ணா நடிக்கிறார். இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடிகை ஸ்ரீ லீலா நடிக்கிறார்.