ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
மலையாள திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக பிஸியாக நடித்து வருபவர் நடிகர் பிரித்விராஜ். தற்போது இயக்குனராகவும் மாறி படங்களை இயக்கி வருகிறார். அதேசமயம் மற்ற மொழி திரைப்படங்களில் நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்கள் தேடிவந்தால் மறுக்காமல் ஒப்புக்கொண்டு நடித்தும் வருகிறார். அந்தவகையில் தற்போது கேஜிஎப் புகழ் இயக்குனர் பிரசாந்த் நீல் டைரக்ஷனில் பிரபாஸ் நடித்து வரும் சலார் திரைப்படத்தில் வில்லனாக நடிக்கிறார் பிரித்விராஜ்.
இந்த படப்பிடிப்பு தளத்திற்கு பிரித்விராஜின் மனைவி சுப்ரியா மேனனும் விசிட் அடித்துள்ளார். இயக்குனர் பிரசாந்த் நீலுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ள சுப்ரியா மேனன், “இந்தியாவின் மிகச்சிறந்த படைப்பாளிகளில் ஒருவரான பிரசாந்த் நீல் படப்பிடிப்பு தளத்தில் அவர் பணிபுரிவதை நேரில் பார்க்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. இந்த படத்தை அவர் உருவாக்குவதை பார்க்கும்போது இன்னும் பல சாதனைகளை இந்த படம் தகர்க்கும் என தெரிகிறது. உங்களுடைய எண்ணங்களை பார்வையை அழகாக திரையில் கடத்தும் அந்த வித்தையை பார்ப்பதற்கே ஆனந்தமாக இருந்தது” என்று இயக்குனர் பிரசாந்த் நீல் குறித்து சிலாகித்து கூறியுள்ளார் சுப்ரியா மேனன்.