100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் மூக்குத்தி அம்மன் 2 : படத்தில் நடிப்பவர்கள் விபரம் | பாலிவுட்டை விட்டு விலக முடிவெடுத்த அனுராக் காஷ்யப் | என் பணியை சிறப்பாக செய்ய முயற்சிக்கிறேன் - கஜராஜ் ராவ் | விஷ்ணு விஷாலுக்கு வில்லன் ஆன செல்வராகவன்! | அடுத்த மாதம் 'ஜெயிலர் 2' படப்பிடிப்பு துவங்குகிறது | ராம்சரண் படத்திற்கு தயாரான சிவராஜ் குமார்! | நாகார்ஜூனா உடன் நடனமாடும் பூஜா ஹெக்டே! | பிளாஷ்பேக் : மோகன் கையில் மைக்கை கொடுத்த இயக்குனர் | பிளாஷ்பேக் : மறக்கடிக்கப்பட்ட மகா கலைஞன் கொத்தமங்கலம் சீனு | கோவில்களில் சினிமா பாட்டு பாட நீதிமன்றம் தடை |
நடிகர் மோகன்லால் மலையாள திரையுலகில் மட்டுமே தனது முழு கவனத்தையும் செலுத்தி நடித்து வருவதால் வருடத்திற்கு குறைந்தது நான்கு படங்களாவது கொடுத்துவிடுகிறார். அதேசமயம் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் நல்ல கதாபாத்திரங்கள் வந்தால் அதையும் தவிர்க்காமல் ஏற்றுக்கொள்கிறார். அந்தவகையில் 2004ல் வெளியான லவ் என்கிற கன்னட படத்தில் முதன்முதலாக நடித்த மோகன்லால், கடந்த 2015ல் மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருடன் இணைந்து மைத்ரி என்கிற படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த படம் மிகப்பெரிய வெற்றியும் பெற்றது.
இந்த நிலையில் ஏழு வருடங்களுக்கு பிறகு மீண்டும் கன்னட படம் ஒன்றில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை இயக்குனர் பிரேம் என்பவர் இயக்குகிறார். இந்த படத்தில் மறைந்த நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவின் தம்பியான துருவ் சார்ஜா கதாநாயகனாக நடிக்க மோகன்லால் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறாராம். இந்த படத்தின் டைட்டில் வெளியீட்டு நிகழ்வு வரும் அக்-20ஆம் தேதி பெங்களூரில் உள்ள ஒரு மாலில் நடைபெற உள்ளது.
ஆனால் மோகன்லால் இதில் நடிக்கிறாரா என்பது பற்றி நேரடியாக கூறாமல், அவருடன் இணைந்து தான் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ள இயக்குனர் பிரேம். 'என்ன விதமான உணர்வுகளில் இருக்கிறேன் என்பதை விவரிக்க எனக்கு வார்த்தைகளே இல்லை. இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான மோகன்லால் சாரின் ஆதரவு எங்களைப் போன்றவர்களை இன்னும் உயரத்திற்கு கொண்டு செல்லும்” என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
அதேசமயம் மோகன்லால் இந்தப்படத்தில் நடிக்கவில்லை. இந்தப்படத்தின் டைட்டிலை மட்டுமே அவர் அறிமுகப்படுத்துகிறார் என்றும் சொல்லப்பட்டு வருகிறது..