'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
தெலுங்குத் திரையலகத்தில் சீனியர் ஹீரோவான கிருஷ்ணம் ராஜு நேற்று அதிகாலை உடல்நலக் குறைவால் மரணம் அடைந்தார். 'பாகுபலி' நடிகர் பிரபாஸின் பெரியப்பா தான் கிருஷ்ணம் ராஜு. அவரது மறைவுக்கு தெலுங்குத் திரையுலகத்தினர் மட்டுமல்லாது மற்ற திரையுலகத்தினரும் இரங்கல் தெரிவித்தனர். சிரஞ்சீவி, மகேஷ் பாபு உள்ளிட்ட தெலுங்கு ஹீரோக்கள் நேரில் சென்று மறைந்த கிருஷ்ணம் ராஜுவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில் நேற்று அதிகாலை மரணம் அடைந்த கிருஷ்ணம் ராஜுவுக்கு சமூக வலைத்தளங்களில் கூட இரங்கல் தெரிவிக்காமல் இருந்தார் 'புஷ்பா' நடிகர் அல்லு அர்ஜுன். சக சீனியர் நடிகர், சக நடிகரின் நெருங்கிய உறவினர் என்று இருந்தும் அல்லு அர்ஜுன் இரங்கல் தெரிவிக்காமல் இருந்தது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அதே சமயம் காலை 9.20 மணியளவில் 'சைமா 2022' விருதுகளை வாங்கியது குறித்து மகிழ்ச்சி தெரிவித்து புகைப்படத்துடன் ஒரு பதிவிட்டிருந்தால் அல்லு அர்ஜுன். அதற்கு ரசிகர்கள் கடும் கண்டனங்களைத் தெரிவித்ததுடன் அவரை 'டிரோல்' செய்தனர்.
எதிர்ப்புகளும், சர்ச்சைகளும் எழுந்த பிறகு மதியம் 2 மணி அளவில்தான் கிருஷ்ணம் ராஜுவுக்கு இரங்கல் தெரிவித்து பதிவிட்டார் அல்லு அர்ஜுன். அவரது இந்த செயல் பிரபாஸ் ரசிகர்களிடமும், கிருஷ்ணம் ராஜு ரசிகர்களிடமும் பொதுவான திரையுலக ரசிகர்களிடமும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.