பிப்ரவரி 2026 : வெளியான 22 படங்களில் எத்தனை வெற்றி? | கண்டிக்கும் நடிகர் மகன்; வார்னிங் கொடுத்த நடிகர் மகள் | திரைப்பயணத்தில் 2ம் அத்தியாயம் தொடக்கம்: தனுஷ் பேச்சு | ஒத்தரோசாவில் இருந்து ஒரு நடிகன் | போட்டோ எடுக்க போய் நடிகராகியிட்டேன்! | பிளாஷ்பேக்: எம் ஜி ஆர் நடிக்க இருந்து, பின் கைவிடப்பட்ட அவரது “உடன்பிறப்பு” திரைப்படம் | உரிமைக்குரல், நட்புக்காக, ஜெயிலர் - ஞாயிறு திரைப்படங்கள் | சவுந்தர்யா பயோபிக் படத்தில் நடிக்க ஆசைப்படும் பிரியங்கா மோகன் | சிம்பு, தனுஷ் மோதல் இருக்கிறதா : சமுத்திரக்கனி பதில் | விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகாவின் ‛ரணபலி' படத்தின் முதல் பாடல் வெளியானது |

பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வார் 2 திரைப்படம் வெளியானது. ஜூனியர் என்டிஆர் இணைந்து நடித்த இந்த படத்தை ரொம்பவே எதிர்பார்த்தார் ஹிருத்திக் ரோஷன். ஆனால் அந்த படம் அவருக்கு தோல்வி படமாக அமைந்து விட்டது. இதனை தொடர்ந்து தனக்கு எப்போதுமே கை கொடுக்கும் கிரிஷ் பட சீரிஸை கையில் எடுத்து கிரிஷ்-4 பாகத்தை படத்தை துவங்குவதற்கான வேளையில் இறங்கினார். ஆனால் இந்த படத்தை இணைந்து தயாரிப்பதாக கை கொடுத்திருந்த யாஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனம் சில காரணங்களால் இதில் இருந்து விலகிக் கொண்டது. அதனால் தற்காலிகமாக இந்த படத்தை தள்ளி வைத்துள்ளார் ஹிருத்திக் ரோஷன்.
அது மட்டுமல்ல, ஹிந்தியில் அவர் நடிக்க விரும்பும் பல இயக்குனர்கள் தற்போது வெவ்வேறு படங்களில் பிஸியாக இருப்பதால் தென்னிந்திய இயக்குனர்களின் பக்கம் ஹிருத்திக் ரோஷன் பார்வை திரும்பி உள்ளதாம். குறிப்பாக சந்தீப் ரெட்டி வங்கா போன்றவர்கள் தெலுங்கில் இருந்து ஹிந்தியில் வந்து சாதித்திருப்பதால் தெலுங்கு அல்லது தமிழ் இயக்குனர் ஒருவரின் டைரக்ஷனில் நடிப்பதற்காக ஹிருத்திக் ரோஷன் தேடல் தொடங்கியுள்ளது. பிரபல தெலுங்கு தயாரிப்பு நிறுவனம் ஒன்று இந்த படத்தை தயாரிக்கும் முயற்சியில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உள்ளதாம்.