பிளாஷ்பேக்: தாமதத்தால் ஏற்பட்ட 4 பெரும் இழப்புகள் | நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளியாகும் 'அடங்காதே' | ஹரிஹர வீரமல்லு : காட்சிகள் குறைப்பு | 3 நாளில் 20 கோடியை அள்ளிய 'தலைவன் தலைவி': மகாராஜா மாதிரி 100 கோடியை தாண்டுமா? | 24 ஆண்டுகளுக்குபின் ஆளவந்தான் நாயகி: விஜய் ஆண்டனியின் 'லாயர்' படத்தில் நடிக்கிறார் | கோலிவுட்டில் கணிசமாக குறைந்த பார்ட்டிகள்: ஸ்ரீகாந்த், அமீர், கிருஷ்ணா எதிர்காலம்? | சிவகார்த்திகேயன் வெளியிடும் ஹவுஸ்மேட்ஸ்: பேய் படமா? வேறுவகை ஜானரா? | மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் |
மலையாள நடிகர்களை பொறுத்தவரை மோகன்லாலின் பல படங்கள் மற்ற தென்னிந்திய மொழிகளிலும் பாலிவுட்டிலும் கூட ரீமேக்காகி உள்ளது. அதுமட்டுமல்ல அவரும் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி என அனைத்து மொழிகளிலும் நடித்துள்ளார். கிட்டதட்ட பான் இந்திய நடிகர் என்கிற அந்தஸ்தை அவர் பெற்றிருந்தாலும் இதுவரை அவரது படங்கள் எதுவும் பான் இந்தியா படமாக வெளியாகவில்லை. இந்தநிலையில் அவர் நடிக்க உள்ள விருஷபா என்கிற படம் முதன்முறையாக மோகன்லாலின் பான் இந்தியப் படமாக உருவாக இருக்கிறது.
இந்த படத்தை தயாரிப்பதன் மூலம் ஏவிஎஸ் ஸ்டுடியோஸ் என்கிற நிறுவனம் திரையுலகில் அடியெடுத்து வைக்கிறது. ஆனால் இந்த படத்தை இயக்கப்போவது யார், படத்தில் பங்குபெறும் நட்சத்திரங்கள் யார் என்பது குறித்தெல்லாம் எந்த தகவலும் வெளியாகவில்லை. அதேசமயம் சமீபத்தில் துபாய் சென்றிருந்த மோகன்லால் இந்தப்படத்தின் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார் என்பது மட்டும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மலையாளம் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் உருவாகும் இந்த படம் பின்னர் தமிழ், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் மாற்றம் செய்யப்பட இருக்கிறது. வரும் 2023 மே மாதம் இந்த படத்தில் படப்பிடிப்பு துவங்க இருப்பதாக சொல்லப்படுகிறது.