கமல்ஹாசன் உடன் இணைந்து நடிக்க ஆசைப்படும் மிருணாள் தாகூர் | ஜெய் ஜோடியாக மீனாட்சி கோவிந்தராஜன் : காதல், திரில்லர் படமாக உருவாகிறது | அஜித்தின் அடுத்த படத்தை இயக்குகிறாரா தனுஷ்? | சர்ச்சையை கிளப்பிய நானியின் டாட்டூ வார்த்தை | கதாநாயகனாக மாறிய பிரேமலு காமெடி நடிகர் | அய்யப்பனும் கோஷியும் இயக்குனரின் கனவு படத்தை நிறைவு செய்த பிரித்விராஜ் | கூலி பட டீசர் மார்ச் 14ல் வெளியாவதாக தகவல் | அமரன் படத்துக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம் | ஐதராபாத்தில் சூர்யா 45வது படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு | கேங்கர்ஸ் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு |
தெலுங்குத் திரையுலகத்தில் 'அர்ஜுன் ரெட்டி' படம் மூலம் மிகவும் பிரபலமானவர் விஜய் தேவரகொண்டா. அவர் நடித்து சில நாட்களுக்கு முன்பு வெளிவந்த பான் இந்தியா படமான 'லைகர்' கடும் விமர்சனங்களுக்கு ஆளானது.
அப்படம் வெளியான அன்று தெலுங்குத் திரையுலகின் குணச்சித்திர நடிகை அனுசுயா ஒரு பதிவிட்டிருந்தார். அதில், “ஒரு அம்மாவின் வலி விலகிப் போகாது. கர்மா…சில சமயங்களில் அது வரத் தாமதமாகும், ஆனால், நிச்சயம் வரும்,” என பதிவிட்டிருந்தார். அதைத் தொடர்ந்து அனசுயாவுக்கும் விஜய் தேவரகொண்டா ரசிகர்களுக்கும் சமூக வலைதளத்தில் மோதல் வெடித்தது. விஜய் தேவரகொண்டா ரசிகர்கள் அனசுயாவை மோசமான வார்த்தைகளால் திட்டி கமெண்ட் செய்து வந்தனர்.
அந்த ரசிகர்களுக்கு அனசுயா எச்சரிக்கை விடுத்துள்ளார். ரசிகர்கள் பதிவிடும் ஒவ்வொரு மோசமான கமெண்ட்டையும் அவர் ரீ-டுவிட் வருகிறார். ரசிகர்கள் அனசுயாவை 'ஆன்ட்டி' எனக் குறிப்பிட்டும் கமெண்ட் செய்வது அனசுயாவை மேலும் கோபத்திற்கு ஆளாக்கியுள்ளது.
ரசிகர்களின் கமெண்ட்டுகளின் ஸ்கிரின் ஷாட்களை அவர் ரீ-டுவீட் செய்து, தனது குடும்பத்தைப் பற்றியும் அவதூறு பேசி வரும் ரசிகர்கள் மீது வழக்கு தொடுப்பேன், இது தனது கடைசி எச்சரிக்கை என்று தெரிவித்துள்ளார்.
ஐந்து வருடங்களுக்கு முன்பு விஜய் தேவரகொண்டா நடித்து வெளிவந்து சூப்பர் ஹிட்டான 'அர்ஜுன் ரெட்டி' பட வெளியீட்டின் போது அதில் ஒரு கெட்ட வார்த்தை இடம் பெற்றதற்கு அனசுயா அதை விமர்சித்து கமெண்ட் செய்திருந்தார். அப்போதிருந்தே விஜய் தேவரகொண்டா ரசிகர்களுக்கும், அனசுயாவுக்கும் பிரச்னை ஆரம்பமானது. சில நாட்களுக்கு முன்பு அனசுயா பொதுவாக பதிவிட்டதை 'லைகர்' படத்தின் தோல்வியைத்தான் குறிக்கிறார் என இப்போது மீண்டும் பிரச்னை உருவெடுத்துள்ளது.