எனக்கான போராட்டத்தை அமைதியாக நடத்துகிறேன்: தீபிகா படுகோனே | விருஷபா ரிலீஸ் தேதியை அறிவித்த மோகன்லால் | ஐரோப்பிய நாடுகளில் நடைபெற்று வரும் சூர்யா, வெங்கி அட்லூரி படப்பிடிப்பு | டில்லி முதல்வரை சந்தித்த காந்தாரா சாப்டர் 1 படக்குழு | இங்கிலாந்து பிரதமருடன் அமர்ந்து படம் பார்த்த ராணி முகர்ஜி | 'மெண்டல் மனதில்' என் மனதுக்கு மிக நெருக்கமான படம் : ஜிவி பிரகாஷ் | அடி உதை வாங்கினேன் : ஹீரோவான பூவையார் | ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் |
மலையாளத்தில் அங்கமாலி டைரீஸ், ஜல்லிக்கட்டு என வித்தியாசமான கதை அம்சத்துடன், வித்தியாசமான கதைக்களத்தில் தனது படங்களை இயக்கி வருபவர் இயக்குனர் லிஜோ ஜோஸ் பள்ளிசேரி. பெரும்பாலும் புதுமுகங்களை மட்டுமே வைத்து படம் இயக்கி வந்த இவர், தற்போது நடிகர் மம்முட்டியை கதாநாயகனாக வைத்து நண்பகல் நேரத்து மயக்கம் என்கிற படத்தை இயக்கி வருகிறார். இவர் சொன்ன கதை பிடித்துப்போய் உடனடியாக நடிக்க சம்மதம் தெரிவித்த மம்முட்டி, இந்த படத்தை தானே தயாரிக்கவும் செய்கிறார். இந்த படம் தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளில் உருவாகி வருகிறது.
இந்த படத்தில் மம்முட்டி தமிழகத்தைச் சேர்ந்த ஒரு சாதாரண கிராமத்து மனிதனாக நடித்துள்ளார். அவர் கிராமத்து திண்ணையில் தலைக்கு கைகளை வைத்து படுத்து உறங்குவது போல இதற்கு முன்பு வெளியான புகைப்படம் ஒன்று ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது.. இந்தநிலையில் தற்போது இன்னும் மாட்டுச்சாணம் மூலம் வரட்டி தட்டி அவற்றை சுவற்றில் காய வைக்கும் தமிழக கிராமத்து தெரு ஒன்றில், லுங்கியை மடித்துக்கொண்டு பழைய டிவிஎஸ் எக்ஸெல் வண்டியை மம்முட்டி ஓட்டி வருவது போன்று ஒரு போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ஒரு பக்கம் அதிரடி கேங்ஸ்டர், அதிரடி போலீஸ் அதிகாரி என நடித்து வரும் மம்முட்டியின் இந்த சராசரி மனிதன் அவதாரம் நம்மை ஆச்சரியப்படுத்தவே செய்கிறது.