மோகன்லாலும் மம்முட்டியும் கண்டுகொள்ளவில்லை ; பன்னீர் புஷ்பங்கள் சாந்தி கிருஷ்ணா வருத்தம் | ‛ஜனநாயகன்' படத்தில் நரேன் நடிக்கும் வேடம் இதுதான் | ‛கிச்சா' என்கிற பெயர் தன்னுடன் ஒட்டிக்கொண்டது எப்படி ? சுதீப் புதிய தகவல் | 'தீ' ரஜினியை ரி-க்ரியேட் செய்துள்ளாரா லோகேஷ்? | லகான் கிராம மக்களுடன் அமர்ந்து ‛சிதாரே ஜமீன் பர்' படத்தை பார்த்த அமீர்கான் | பிளாஷ்பேக்: காட்சியும், கானமும் “நான் பாடும் பாடல்” | உழைக்கும் கரங்கள், உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன், பீஸ்ட் - ஞாயிறு திரைப்படங்கள் | சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ |
நடிகர் மம்முட்டி தான் நடித்து வரும் படம் ஒன்றிற்காக தற்போது இலங்கையில் நடைபெற்று வரும் அதன் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார். இந்த நிலையில் இலங்கையில் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர் ஜெயசூர்யாவை நேரில் சந்தித்து உரையாடியுள்ளார் மம்முட்டி. இதுகுறித்த புகைப்படங்களை ஜெயசூர்யாவே தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
90களில் இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனாக, ரன் மெஷினாக வலம் வந்தவர் சனத் ஜெயசூர்யா. கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை படைத்த இவர், தற்போது இலங்கையின் சுற்றுலாத்துறை தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கையில் தற்போது நிலவும் மிகவும் நெருக்கடியான சூழலிலும் இலங்கை சுற்றுலாவை மேம்படுத்தும் விதமாக பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார் ஜெயசூர்யா. அதன் ஒரு பகுதியாக தான் ஜெயசூர்யா மம்முட்டி இருவரின் சந்திப்பும் நிகழ்ந்துள்ளது.
இதுபற்றி ஜெயசூர்யா கூறும்போது, “மூத்த மலையாள நடிகர் மம்முட்டியை சந்தித்ததில் பெருமைப்படுகிறேன். உண்மையிலேயே நீங்கள் ஒரு சூப்பர் ஸ்டார்.. ஸ்ரீலங்காவிற்கு வருகை தந்ததற்கு நன்றி. இதேபோல அனைத்து இந்திய நட்சத்திரங்களையும் நண்பர்களையும் எங்களது நாட்டிற்கு சுற்றுலாவாக வந்து பார்வையிட வேண்டுமென அழைப்பு விடுகிறேன்” என்று கூறியுள்ளார்.