ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
1980களில் முன்னணியில் இருந்த மலையாள இயக்குனர் ஜி.எஸ்.பணிக்கர். இகாகினி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். ஷோபா, இந்திரபாலன், ரவிமேனன் உட்பட பலர் நடித்திருந்தனர். இந்தப் படம் பல விருதுகளைப் பெற்றது. இதை தொடர்ந்து வாசரஸய்யா, சகியன்டே மகன், பிராகிரிதி மனோகரி, பூத்தன்பாண்டி , பாண்டவபுரம் உட்பட பல படங்களை இயக்கினார்.
பின்னர் சொந்தமாக படம் தயாரித்த பணிக்கர் அதன் மூலம் ஏற்பட்ட பொருளாதார சிக்கல் காரணமாக சினிமாவை விட்டு விலகினார். நீண்ட இடைவெளிக்கு பிறகு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு மிட் சம்மர் ட்ரீம்ஸ் என்ற படத்தை இயக்குவதாக அறிவித்தார். ஆனால் அந்த படம் தொடங்க இருந்த நேரத்தில் அவருக்கு புற்று நோய் பாதிப்பு கண்டறியப்பட்டது.
இதன் காரணமாக படத்தை தொடங்காமல் திருவனந்தபுரம் ஆற்றிங்கல் பகுதியில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். நோய் தாக்கம் அதிகமாகவே சென்னை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி நேற்று காலமானார். அவரது மறைவுக்கு மலையாள திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.