'காந்தாரா-2' படப்பிடிப்பில் மீண்டும் ஒரு மலையாள நடிகர் மரணம் | பஹத் பாசில் - எஸ்ஜே சூர்யா படம் டிராப் ஏன்? மனம் திறந்த இயக்குனர் விபின் தாஸ் | விக்ரம் 63 படம் கைவிடப்பட்டதா? | கூலி, குபேரா படங்கள் குறித்து நாகார்ஜுனா வெளியிட்ட தகவல் | அட்லி படத்தை அடுத்து மேலும் 2 புதிய படங்களில் கமிட்டான அல்லு அர்ஜுன் | தக் லைப் படத்தின் எட்டாவது நாள் வசூல் என்ன | சிம்புவை பற்றி பேச மறுக்கும் நிதி அகர்வால் | திருநெல்வேலி செல்ல பாஸ்போர்ட் கேட்கும் மாரிசெல்வராஜ் | முதல்ல திருமண மண்டபம் : வேகமெடுக்கும் நடிகர் சங்க பணிகள் | படை தலைவன் படத்தில் விஜயகாந்த் காட்சிக்கு வரவேற்பு |
திருவனந்தபுரத்தில் நேற்று (ஆக.3)நடைபெற இருந்த கேரள அரசின் 52வது திரைப்பட விருது வழங்கும் விழா திடீரென ரத்து செய்யப்பட்டது. கேரளாவில் கனமழை பெய்து வருவதால் இந்த விழா ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக கேரள கலாச்சாரத்துறை அமைச்சர் வி.என்.வாசவன் தனது சமூக வலைதளப்பக்கத்தில் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் எழுதியிருப்பதாவது: தொடர்ந்து பெய்து வரும் கனமழையை அடுத்து திருவனந்தபுரம் உள்பட சில மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் திரைப்பட விருது வழங்கும் விழா, ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. விழா நடக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்'' என்று தெரிவித்துள்ளார்.