புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
கடந்த 2017ல் மலையாள நடிகை ஒருவர் காரில் கடத்தப்பட்டு பாலியல் ரீதியாக சித்திரவதை செய்யப்பட்டு அது வீடியோவாக எடுக்கப்பட்ட வழக்கில் நடிகர் திலீப் எட்டாவது குற்றவாளியாக கைது செய்யப்பட்டார். பின்னர் மூன்று மாதம் சிறைவாசம் அனுபவித்து ஜாமினில் வெளியே வந்தார். அதன்பிறகு அவர் இந்த வழக்கு தொடர்பான விசாரணை அதிகாரிகளை கொல்ல முயற்சித்ததாகவும் பாதிக்கப்பட்ட நடிகையின் கடத்தலின்போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளை தனது மொபைலில் பார்த்ததாகவும் அவரது நண்பராக இருந்து எதிரியாக மாறிய இயக்குனர் பாலச்சந்திரன் குமார் என்பவர் கடந்த வருடம் அளித்த புகாரின் பேரில் இன்னொரு வழக்கு பதியப்பட்டு அது தொடர்பான விசாரணையும் நடைபெற்று வருகிறது.
நடிகை வழக்கில் திலீப்பிற்கு எதிராக நிறைய ஆதாரங்கள் இருப்பதாக சொல்லப்பட்டு வரும் நிலையில், கேரள முன்னாள் டிஜிபி ஸ்ரீகலா என்பவர் திலீப் ஒரு அப்பாவி என்றும் அவரை சுற்றி இந்த வழக்கு ஜோடிக்கப்பட்டு உள்ளது என்றும் தற்போது ஒரு பேட்டி ஒன்றில் கூறி அதிர்வை ஏற்படுத்தியுள்ளார்.
இதுபற்றி அந்த நாற்பது நிமிட பேட்டியில் அவர் கூறும்போது, “நடிகை கடத்தல் வழக்கில் தவறுதலாகவோ அல்லது வேண்டுமென்றோ திலீப் உள்ளே இழுக்கப்பட்டு உள்ளார். போலீஸ் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது என்றாலும் தவறுதலாக திலீப் மீது குற்றம் சாட்டியது தவறு என்பதை ஏன் அவர்கள் ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள் என்றுதான் புரியவில்லை. இந்த வழக்கில் திலீப் நிறைய கஷ்டப்பட்டு உள்ளார்.
திலீப்பிற்கு எதிராக போலீசார் தாங்கள் வைத்திருப்பதாக சொல்லும் ஆதாரம் முற்றிலும் பொய்யானது. அதேசமயம் திலீப்பின் எதிரிகள் அவரை விட ரொம்பவே பவர்ஃபுல்லானவர்களாக இருக்கிறார்கள். அவருக்கு எதிராக இருப்பதாக சொல்லப்படும் ஆதாரங்கள் அனைத்தும் இந்த வழக்கின் முதல் குற்றவாளியான பல்சர் சுனில் மற்றும் அவனது கேங் மூலமாக சித்தரிக்கப்பட்டவை தான்.. அவ்வளவு ஏன் திலீப்பும் அவனும் இணைந்து எடுத்துக் கொண்டதாக வெளியான புகைப்படம் கூட போட்டோஷாப் செய்து போலியாக சித்தரிக்கப்பட்ட ஒரு புகைப்படம் தான்.
பல்சர் சுனிலும் அவனது கேங்கும் இதுபோன்று இன்னும் சில நடிகைகளிடம் தாக்குதல் நடத்தி உள்ளார்கள். ஆனால் அவை வெளியே தெரியவில்லை. இந்த வழக்கைப் பொறுத்தவரை திலீப் ஒரு அப்பாவி. இந்த வழக்கில் திலீப்புக்கு ஆதரவானவர்கள் யாரிடமும் போலீசார் ஏன் விசாரணை நடத்தவில்லை என்பது புரியாத புதிராகவே இருக்கிறது” என்று கூறியுள்ளார் முன்னால் டிஜிபி ஸ்ரீகலா.
இவர் தான் கேரளாவின் முதல் பெண் டிஜிபி என்கிற பெருமையை பெற்றவர். ஒரு முன்னாள் டிஜிபி, அதுவும் ஒரு பெண் நடிகை கடத்தல் வழக்கில் திலீப் வழக்கில் ஒரு அப்பாவி என கூறியிருப்பது சோஷியல் மீடியாவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதுடன் இரண்டுவிதமான விவாதங்களையும் தற்போது கிளப்பி விட்டுள்ளது.