2025ல் தமிழ் சினிமா: இப்படியே போய்விடுமா ??? | இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...? | தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' | பிளாஷ்பேக்: முதல் நட்சத்திர ஒளிப்பதிவாளர் |
ஹிந்தியில் கார்வான், தி சோயா பேக்டர் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ள துல்கர் சல்மான், தற்போது சுப் என்கிற படத்தில் நடித்துள்ளார். ஹிந்தியில் அமிதாப் பச்சனை வைத்து பா, சீனிகம், ஷமிதாப் போன்ற வித்தியாசமான படங்களை இயக்கிய பால்கி தான், இந்த படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் பாலிவுட் நடிகர் சன்னி லியோன் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்திற்கு ரிவெஞ் ஆப் தி ஆர்டிஸ்ட் என்கிற டேக் லைன் வைக்கப்பட்டுள்ளது. இதுவரை பால்கி இயக்கிய படங்களில் இருந்து மாறுபட்டு இருக்கை நுனியில் அமர வைக்கும் திரில்லர் படமாக இது உருவாகியுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் டீசர் மறைந்த நடிகர் குரு தத்தின் நினைவு தினமான நேற்று வெளியிடப்பட்டது.