எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
தெலுங்கு திரையுலகில் நாகார்ஜுனாவின் மகனாக வாரிசு நடிகராக அறிமுகமானவர் நடிகர் நாகசைதன்யா. ஏ மாயா சேசாவே என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தபோது இவருக்கும் சமந்தாவுக்கும் இடையே காதல் மலர்ந்து, கடந்த சில வருடங்களுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். மூன்று வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பரஸ்பரம் இருவரும் பிரிவதாக கடந்த சில மாதங்களுக்கு முன் அறிவித்து விவாகரத்திற்கும் விண்ணப்பித்துள்ளனர்.
இதை தொடர்ந்து சமந்தா பிஸியான நடிகையாகவும் வழக்கத்திற்கு மாறான கிளாமர் மற்றும் அதிரடி கதாபாத்திரங்களிலும் சுதந்திரமாக நடித்து வருகிறார். இன்னொரு பக்கம் நாகசைதன்யா தானுண்டு தன் படங்கள் உண்டு என்று அமைதியாக வலம் வருவது போல் தெரிந்தாலும் சமீப நாட்களாக பாலிவுட் நடிகை ஷோபிதா துலிபாலா என்பவருடன் நெருக்கமாக பழகி வருகிறார் என டோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.
சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற மேஜர் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் ஷோபிதா துலிபாலா. இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளுக்காக ஹைதராபாத்திற்கு அடிக்கடி வருகை தந்த ஷோபிதா துலிபாலாவுடன் பலமுறை ஹோட்டல்களில் நாகசைதன்யா சந்திப்பு நடத்தியதாகவும் தற்போது ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் புதிதாக கட்டி வரும் வீட்டிற்கும் அவரை அழைத்துச் சென்றதாகவும் கூட சில தகவல்கள் வெளியாகி உள்ளன. விரைவில் இருவரும் ஒரு படத்தில் இணைந்து நடித்ததாலோ அல்லது ஏதாவது நிகழ்ச்சிகளில் ஒன்றாக கலந்து கொள்ளும் பட்சத்திலோ இந்த தகவல் உறுதியாக மாற வாய்ப்புள்ளது என்றும் சொல்லப்படுகிறது.