புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? | ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் | அஜித்திடம் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய விஷ்ணு மஞ்சு | எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‛ராமாயணா' : அறிமுக வீடியோ வெளியீடு | மார்கோ 2 நிச்சயம் உருவாகும் : உன்னி முகுந்தன் விலகிய பிறகும் உறுதியாக நிற்கும் தயாரிப்பாளர் |
ராம்சரண் நடித்து வந்த ஆர்ஆர்ஆர் படம் வெளிவர இருக்கிறது. தந்தையுடன் நடித்து வந்த ஆச்சார்யா படம் நிறைவடைந்திருக்கிறது. ஷங்கர் இயக்கத்தில் நடித்து வரும் படத்திற்கும் இடைவெளி விடப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் வீட்டுக்குள்ளும், அது முடிவுக்கு வந்ததும் பிசியாக படப்பிடிப்பிலும் இருந்த ராம் சரண் ஒரு சிறிய பிரேக் எடுத்துக் கொண்டு பின்லாந்துக்கு சுற்றுலா சென்று விட்டார்.
மனைவி உபாசனாவையும் அழைத்துச் சென்றிருக்கிறார். இருவருக்கும் திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிவிட்டது. அடிக்கடி வெளிநாட்டுக்கு சுற்றுலா செல்லும் இந்த தம்பதிகள் 3 வருட இடைவெளிக்கு பிறகு இப்போது சென்றிருக்கிறார்கள். எங்களை மனதளவிலும், உடல் அளவிலும் புதுப்பித்துவிட்டு திரும்பி வருகிறோம். என்று டுவிட்டரில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.