பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
விஷ்ணு மஞ்சு, பாயல் ராஜ்புட் நடிக்கும் படத்தை இஷான் சூர்யா இயக்குகிறார். படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. இந்த கூட்டணியில் தற்போது சன்னி லியோன் இணைந்திருக்கிறார். அவர் ரேணுகா என்ற கேரக்டரில் நடிக்க இருக்கிறார். இதனை சன்னி லியோன் அறிவித்திருக்கிறார்.
இந்த படம் அடல்ட் காமெடி ஜார்னரில் தயாராகிறது. பக்கா கிராமத்துக்குள் நுழையும் ஒரு கவர்ச்சி பெண்ணால் வரும் பிரச்னைகளை காமெடியாக சொல்ல இருக்கிறது. கிராமத்து இளம் ஜோடிகளாக விஷ்ணு மஞ்சுவும், பாயல் ராஜ்புட்டும் நடிக்க, கவர்ச்சி பெண்ணாக நுழைகிறவர் சன்னி லியோன்.
திரைக்கதையை ஜி நாகேஷ்வர் ரெட்டி எழுதியுள்ளார். இவர் கல்லி ரவுடி மற்றும் தெனாலி ராமகிருஷ்ணா பிஏ பிஎல் போன்ற படங்களை இயக்கியுள்ளார். சோட்டா கே நாயுடு ஒளிப்பதிவாளராகவும், அனுப் ரூபன்ஸ் இசையமைப்பாளராகவும் பணியாற்றுகிறார்கள்.