ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
பொக்கிஷம் படம் மூலம் அறிமுகமானவர் நடிகை பிந்து மாதவி, தொடர்ந்து வெப்பம், கழுகு, கேடி பில்லா கில்லாடி ரங்கா, பசங்க 2, தேசிங்கு ராஜா, வருத்தப்படாத வாலிபர் சங்கம், சவாலே சமாளி, ஜாக்சன் துரை உள்பட பல படங்களில் நடித்தார். தமிழ் பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டு புகழ் பெற்றார். தற்போது பகைவனுக்கு அருள்வாய், யாருக்கும் அஞ்சேல், மாயன் படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் தற்போது தமிழைப் போல தெலுங்கு டிஜிட்டலில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் நான்ஸ்டாப் பிக்பாஸ் போட்டியில் பங்கேற்பாளராக கலந்து கொண்டுள்ளார். இதனை நடிகர் நாகர்ஜுனா அக்கினேனி தொகுத்து வழங்கி வருகிறார். பிந்து மாதவி தெலுங்கில் ஆவகி பிரியாணி, பம்பர் ஆபர், ஓம் சாந்தி, பரத்தி ரோஜூ, ராம ராக கிருஷ்ண கிருஷ்ண, பில்லா ஜமீன்தார் உள்பட பல படங்களில் நடித்திருக்கிறார். ஏற்கனவே தமிழில் பிக்பாஸ் சீசன் 1ல் இவரும் ஒரு போட்டியாளராக பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.