வடிவேலுக்கு இந்த நிலையா?: மாரீசன் காட்சிகள் ரத்தான பரிதாபம் | திருமணம் எப்போது? விஜய்தேவரகொண்டா பதில் இதுதான் | சினிமாவில் இது தான் எதார்த்தம் : திரிப்தி டிமிரி | சோசியல் மீடியாவில் விமர்சிக்கப்படும் சாய்பல்லவியின் சீதா தேவி கதாபாத்திரம்! | விஜய் இல்லாமல் எல்சியுவை தொடர சான்ஸ் இல்லை! - லோகேஷ் கனகராஜ் | பிரசாந்த் நீல், ஜூனியர் என்டிஆர் படத்தில் இணைந்த டொவினோ தாமஸ் | பாலிவுட் நடிகர் அமீர்கான் வீட்டுக்கு போன 25 ஐபிஎஸ் அதிகாரிகள்! | வில்லன் நடிகரின் வீண் பிடிவாதத்தால் மோகன்லால் ராஜினாமா செய்தார் : மாலா பார்வதி | பாண்டிராஜ் இயக்கத்தில் அடுத்து நடிப்பது விஜய்சேதுபதியா? சூரியா? | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளரின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு |
பிரேமம் படம் மூலம் அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன். அந்த படத்துக்கு கிடைத்த வரவேற்பால் பிரபலமானார். தமிழில் கொடி படம் மூலம் அறிமுகமானார். இதையடுத்து ஆர்.கண்ணன் இயக்கிய 'தள்ளிப் போகாதே' படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்தார். தமிழையடுத்து தெலுங்கு, கன்னடத்தில் படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
அடுத்து தெலுங்கில் ரவுடி பாய்ஸ் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த பட டிரைலர் சமீபத்தில் வெளியானது. டிரைலரை பார்த்தவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். லிப் லாக் காட்சியில் முதல் முறையாக அனுபமா நடித்துள்ளது தான் அதிர்ச்சிக்கு காரணம். லிப்லாக் மட்டுமல்லாமல் படத்தில் நெருக்கமான காதல் காட்சிகளும் இருக்கிறது என்கிறது படக்குழு. இதுவரை நடித்திராத இதுபோன்ற காட்சிகளில் நடிப்பதற்காக அனுபமா இந்த படத்துக்காக 50 லட்சம் சம்பளமாக பெற்றிருக்கிறாராம்.