ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
கொரோனா தாக்கம் நிலவியதால் கடந்த ஆண்டு முதல் கடந்த மாதம் வரை மோகன்லால் மற்றும் பிரித்விராஜ் இருவரின் படங்களும் ஓடிடி தளத்தில் தான் வெளியாகி வந்தன. மோகன்லால் நடித்த மரைக்கார் படம் மட்டும் சில பல இழுபறிகளுக்கு பின்னர் நேரடியாகவே தியேட்டர்களில் வெளியானது.. இனி இவர்கள் படங்கள் தியேட்டர்களில் மட்டும் தான் வெளியாகும் என சொல்லப்பட்டு வந்த நிலையில் தற்போது மோகன்லாலின் ப்ரோ டாடி படம் ஓடிடியில் வெளியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
லூசிபர் படத்தை தொடர்ந்து பிரத்விராஜ் டைரக்சனில் மோகன்லால் இரண்டாவது முறையாக நடித்துள்ள இந்த ப்ரோ டாடி படத்தில் பிரித்விராஜும் இன்னொரு ஹீரோவாக நடித்துள்ளார். இந்தப்படம் ஜன-26ஆம் தேதி வெளியாகும் என தெரிகிறது.
அதேசமயம் தனது ஆஸ்தான இயக்குனரான பி.உன்னிகிருஷ்ணன் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள ஆராட்டு திரைப்படம் தியேட்டர்களில் தான் வெளியாக உள்ளது. சமீபத்தில் இந்தப்படத்தின் சென்சார் வேலைகள் முடிந்து படத்திற்கு 'யு' சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்தப்படத்தின் ரிலீஸ் தேதி பிப்-10 என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் ப்ரோ டாடி காமெடி படமாகவும் ஆராட்டு ஆக்சன் படமாகவும் உருவாகியுள்ளது.