ருக்மணி வசந்த்தை கவர்ந்த 10 விஷயங்கள் | தமிழில் தடுமாறும் கதாநாயகியரின் படங்கள்…. | டிசம்பரில் ஓடிடிக்கு வரும் ராஷ்மிகாவின் இரண்டு படங்கள் | ஹிந்தியில் வரவேற்பைப் பெறும் 'தேரே இஷ்க் மெய்ன்' | அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு |

பங்கராஜூ பட இயக்குனர் கல்யாண் கிருஷ்ணா இயக்கத்தில் சிரஞ்சீவி, த்ரிஷா, சித்து ஜோனலகட்டா, ஸ்ரீ லீலா உள்ளிட்டோர் ஒரு புதிய படத்திற்காக நடிக்க உள்ளனர். இந்த படம் மலையாளத்தில் மோகன்லால், பிரிதிவிராஜ் நடித்து வெளிவந்த ப்ரோ டாடி படத்தின் ரீமேக் என்று தகவல் வெளியாகியுள்ளது.
திருமணமாக ஒரு இளைஞன், ஒரேநேரத்தில் அண்ணனாகவும், அப்பாவாகவும் புரொமோஷன் ஆனால் என்ன நடக்கும் என்பது மாதிரியான கதைகளத்தில் ப்ரோ டாடி படம் வெளிவந்தது. மலையாளத்தில் வரவேற்பை பெற்ற இந்த படத்தை இப்போது சிரஞ்சீவி நடிக்க ரீமேக் செய்ய போகிறார்கள்.
விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கி குறைவான நாட்களிலே படப்பிடிப்பை முடித்து 2024 பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தை சிரஞ்சீவி மகள் சுஷ்மிதா தயாரிப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறார்கள்.