சுஹர்ஷ் ராஜ் நடித்த மியூசிக் வீடியோ: அனூப் ஜலோடா, பாடகி மதுஸ்ரீ பாராட்டு | ஆண்டனி வர்கீஸ் நடிக்கும் 'காட்டாளன்' பர்ஸ்ட்லுக்கு வெளியீடு | தீபாவளிக்கு வெளியாகும் 'கருப்பு' படத்தின் முதல் பாடல்! | கார்த்தி, விஜய் சேதுபதி போன்ற நடிகர்களால் தான் நல்ல கதை பெரிய படமாக வருகிறது! நலன் குமாரசாமி | சம்பளத்தை குறைத்து கொண்ட விக்ரம்! | ஹ்ரித்திக் ரோஷன் தயாரிப்பில் உருவாகும் புதிய வெப் தொடர் | அர்ஜுன் படத்தின் புதிய அப்டேட்! | 'சீன்'களை திருடும் இயக்குனர் | நான் ‛அப்புக்குட்டி' ஆனது இப்படித்தான் | ரசிகர்கள் 'இன்டலிஜென்ட்': சாய் பிரியா சர்டிபிகேட் |
மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வருகின்ற ஜூலை 14 அன்று வெளியாக உள்ள திரைப்படம் மாவீரன். அதிதி ஷங்கர், மிஷ்கின், சுனில், சரிதா, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பரத் ஷங்கர் இசையமைக்கும் இந்த படத்தை சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதுவரையில் இப்படத்திலிருந்து வெளிவந்த இரண்டு பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றது .
இந்த படம் பற்றி ஒரு பேட்டியில் மடோன் அஸ்வின் பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது; " மாவீரன் படம் நல்ல எண்டர்டெயின்மெண்ட் ஆன கமர்ஷியல் படம். சிவகார்த்திகேயன் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்தார். இதுவரை வந்த சிவகார்த்திகேயன் படங்களில் இந்தப்படம் வித்தியாசமாக இருக்கும். நாங்கள் அண்ணன் தம்பியாக ஈடுபட்டு பணியாற்றியுள்ளோம் . மண்டேலா படத்தில் வருவது போல் யோகி பாபு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மிஷ்கின் மற்றும் சுனில் இருவரும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மிஷ்கினுக்கு படத்தில் குறைவான வசனம் தான்'' என்றார்.