ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

மலையாள திரையுலகில் முதன்முறையாக சூப்பர்மேன் கதாபாத்திரத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள 'மின்னல் முரளி' படம் நேற்று பான் இந்தியா ரிலீஸாக ஒடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. மாரி-2 படத்தில் வில்லனாக நடித்த டொவினோ தாமஸ் தான் இந்தப்படத்தில் சூப்பர்மேன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கோதா படம் மூலம் அவரை கமர்ஷியல் ஹீரோவாக மாற்றிய பஷில் ஜோசப் இந்தப்படத்தை இயக்கியுள்ளார்.
சூப்பர்மேன் கதை என்பதால் படத்தை புரமோஷன் செய்யும் விதமாக பாலிவுட் நடிகர் சல்மான் கான், கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் ஆகியோரை டொவினோ தாமஸ் சந்தித்த புகைப்படங்கள் சில நாட்களுக்கு முன் வெளியாகின. அந்த வகையில் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கும் டொவினோ தாமஸும் இந்தப்படத்திற்கான புரோமோவுக்காக இணைந்து நடித்துள்ளார்கள் என்பது சமீபத்தில் வெளியான வீடியோ மூலம் தெரியவந்துள்ளது.
இந்த வீடியோவில், சூப்பர்மேனாக நடிக்கும் டொவினோ தாமஸுக்கு யுவராஜ் சிங் பந்து வீசுவது போலவும், அதை கிரிக்கெட் மட்டையால் அடிக்கும்போது அந்த பந்து அதிவேகத்தில் வேறு மாநிலங்களை மட்டுமல்ல வேறு நாடுகளை கூட கடந்து செல்வது போலவும் அந்த பந்தை சூப்பர்மேனான டொவினோ தாமசே சென்று கேட்ச் பிடிப்பது போலவும் வித்தியாசமாக படமாக்கப்பட்டு உள்ளது..




