ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

தெலுங்கில் நானி நடித்துள்ள ஷியாம் சிங்கா ராய் படம் தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் வரும் டிச-24ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. நானி இரு வேடங்களில் நடித்துள்ள இந்தப்படத்தில் கதாநாயகியாக சாய்பல்லவி நடித்துள்ளார். சமீபத்தில் கொச்சியில் நடைபெற்ற இந்தப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் நானி.
இந்த நிகழ்வில் நானி பேசும்போது, “இந்த லாக்டவுன் காலகட்டத்தில் எனது நேரத்தை அற்புதமாக செலவழிக்க உதவியது மலையாள படங்கள் தான்.. அய்யப்பனும் கோஷியும், ட்ரைவிங் லைசென்ஸ், லூசிபர் என பல அருமையான படங்களை பார்த்தேன்” என்று கூறினார்.
அப்போது அவரிடம் .மலையாள படங்களில் நடிப்பீர்களா என கேட்டபோது, “நிச்சயமாக நடிப்பேன்.. உங்களுடைய நஸ்ரியா தற்போது என்னுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார். பஹத் பாசில் எனக்கு நல்ல நண்பாராகிவிட்டார். என்னிடம் நஸ்ரியா பேசும்போது கூட, நீங்கள் மலையாள படங்களில் நடிப்பதாக இருந்தால் முதலில் பஹத் பாசில் படத்தில் அவருடன் இணைந்து நடிக்க வேண்டும் என செல்லமாக கண்டிஷனே போட்டுள்ளார்” என கூறினார் நானி.




