ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
பழம்பெரும் தெலுங்கு பாடலாசிரியர் சீதாராம சாஸ்திரி. 37 ஆண்டுகளுகாக தெலுங்கு திரைப்படங்களுக்கு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை எழுதி உள்ளார். 66 வயதான சீதாராம சாஸ்திரி நுரையீரல் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். இதனால் கடந்த சில மாதங்களாக ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் காலமானார்.
கே.விஸ்வநாத் இயக்கிய ஜனனி ஜன்மபூமி படத்தில் பாடலாசிரியராக அறிமுகமானார். தொடர்ந்து பாடல்கள் எழுதி வந்தார். கடைசியாக எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கி வரும் ஆர்ஆர்ஆர் படத்துக்கு பாடல் எழுதினார். பல்வேறு மாநில விருது பெற்ற அவருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது.
சீதாராம சாஸ்திரியின் மறைவுக்கு பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‛‛தெலுங்கு மொழியின் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டவர் சிரிவென்னேலா சீதாராம சாஸ்திரி. அவரது மறைவு ஆழ்ந்த வருத்தத்தை அளித்தது. கவிதை மற்றும் பன்முகத்தன்மை அவரது எழுத்துக்களில் வெளிப்படும். தெலுங்கு மொழியின் புகழுக்காக கடுமையாக உழைத்தார். அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்று குறிப்பிட்டுள்ளார்.