36 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினி படத்திற்கு 'ஏ' சான்றிதழ் | இரண்டாவது முறை தேசிய விருது பெறும் ஊர்வசி | தேசிய விருது வென்றவர்களுக்கு கமல்ஹாசன் வாழ்த்து | வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் |
துல்கர் சல்மான் நடித்து நேற்று வெளியான படம் குரூப். இந்திரஜித் சுகுமாறன், ஷோபிதா துலிபாலா உள்பட பலர் நடித்துள்ளனர். ஸ்ரீநாத் ராஜேந்திரன் இயக்கி உள்ளார். துல்கர் சல்மானே தயாரித்துள்ளார். இந்த படம் கேரளா போலீஸ் மற்றும் சர்வதே போலீஸ் அமைப்பான இண்டர்போல் ஆகியவற்றால் 1984ம் ஆண்டு முதல் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட சுகுமார குரூப் என்பவரின் வாழ்க்கை கதையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
படம் முடிந்த பிறகு சுகுமார குரூப்பின் குடும்பத்திற்கு போட்டுக்காட்டி அவர்களின் ஒப்புதல் பெற்றே வெளியிடப்பட்டது. இந்த நிலையில் இந்த படம் சுகுமார குரூப்பின் தனியுரிமையை பாதிக்கிறது, அவரது குடும்பத்தினர் இந்த படத்தை விரும்பவில்லை எனவே படத்திற்கு தடைவிதிக்க வேண்டும் என்று கொச்சியை சேர்ந்த செபின் தாமஸ் என்பவர் கேரள உயர்நீதி மன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் படத்திற்கு தடைவிதிக்க மறுத்து விட்டது, என்றாலும் இதுகுறித்து விளக்கம் அளிக்க படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர், மத்திய, மாநில அரசுகளின் காவல்துறை மற்றும் இண்டர்போலுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.