மீண்டும் லாயர் ஆகிறார் விஜய் ஆண்டனி | டெரர் போலீஸ் அதிகாரியாக சாய் தன்ஷிகா | பிளாஷ்பேக்: மோகனுக்கு குரல் கொடுத்த கமல் | பிளாஷ்பேக்: 75 ஆண்டுகளுக்கு முன்பே 'அவருக்கு பதில் இவர்' | ஐதராபாத்தில் ஆரம்பமாகும், நடக்கும் தமிழ் சினிமா…. இதுதான் தமிழ்ப்பற்றா ? | மம்முட்டி - கவுதம் மேனன் பட ஓடிடி ரிலீஸ் தாமதம் ஏன் ? | மதுபாலாவின் 'சின்ன சின்ன ஆசை': வெளியிட்ட மணிரத்னம் | மோகன்லால் பிறந்தநாள் பரிசாக பலாப்பழ ஓவியம் வரைந்த ஓவியர் | சொல்லாமல் விலகிய பாலிவுட் நடிகர் மீது 25 கோடி நஷ்ட ஈடு கேட்டு அக்ஷய் குமார் வழக்கு | 'ஸ்படிகம்' இயக்குனரை அழைத்து வந்து வித்தியாசமான முறையில் கவுரவித்த சுரேஷ்கோபி பட இயக்குனர் |
கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் முடிவுக்கு வந்து, திரையரங்குகள் திறக்கப்பட்டு வழக்கம்போல படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை என்பதால் பலரும் தங்களது படங்களை இன்று திரையிட ஏற்பாடுகளை செய்து வந்தனர். அந்த வகையில் கன்னடத்தில் சுதீப் நடித்த கோட்டிகோபா-3 என்கிற படமும் இன்றைய தினம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டு தியேட்டர்களில் டிக்கெட் புக்கிங்கும் நடைபெற்றது.
இந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளருக்கும் பைனான்ஸியருக்குமான கொடுக்கல் வாங்கல் பிரச்சனை தீர்க்கப்படாததால் கோட்டிகோபா-3 சொன்னபடி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகவில்லை. தியேட்டரில் ஆர்வத்துடன் படம் பார்க்க குவிந்திருந்த சுதீப்பின் ரசிகர்கள் இதனால் சோர்வடைந்த நிலையில், படத்தின் தயாரிப்பாளர் சூரப்பா பாபு, பிரச்சினைகள் அனைத்தும் இன்று செட்டில் செய்யப்பட்டு நாளை படம் வெளியாகும் என்றும் காலை 6 மணி காட்சி முதல் ரசிகர்கள் படத்தை கண்டுகளிக்கலாம் எனவும் ஒரு ஆறுதல் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.