கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! | ஹீரோயின்களுக்கு முக்கியத்தும் உள்ள கேங்ஸ்டர் கதையை எழுதுங்கள் : கார்த்திக் சுப்பராஜிற்கு பூஜா வேண்டுகோள் | போய் வா நண்பா…ஒரு நாளில் ஒரு மில்லியன்… |
படம் : அன்பே சிவம்
வெளியான ஆண்டு : 2003
நடிகர்கள் : கமல், மாதவன், கிரண், நாசர்
இயக்கம் : சுந்தர்.சி
தயாரிப்பு : லட்சுமி மூவி மேக்கர்ஸ்
முன் பின் தெரியாத ஒரு மனுஷனுக்காக கண்ணீர் விடுற, அந்த மனசு இருக்கே.. அது தான் கடவுள் என்றது, அன்பே சிவம்! மசாலா படங்கள், வசூலை கொடுக்கும்; ஆனால், காலம் கடந்து நிலைத்து நிற்காது. அன்பே சிவம் வசூல் ரீதியாக தோல்வியை தழுவியதால், இயக்குனராகவும், இணை தயாரிப்பாளராகவும் இருந்த சுந்தர்.சி பெரும் பாதிப்புக்கு உள்ளானார். அதன் பின், வழக்கமான மசாலா படங்களை கொடுத்து வருகிறார். ஆனாலும், இன்னும் எத்தனை ஆண்டுகளானாலும் சுந்தர்.சியின் பெயர் சொல்லும் படம், அன்பே சிவம் தான்.
கம்யூ., கலைஞராக மீசையை முறுக்கும்போது, கமல் அவ்வளவு கம்பீரம். விபத்திற்கு பின், முகத்தில் தழும்புடன் அன்பை பரப்பும் போது, கமல் அவ்வளவு சாந்தம். கமல், தன் பெயரில் இருக்கும், சிவம் பிடிக்காத நல்லா. மாதவன், அன்பு பிடிக்காத ஏ.அர்ஸ். இந்த இருவரது பயணத்தில் துவங்குகிறது, அன்பே சிவம். படத்தை எத்தனை முறை பார்த்தாலும், புதிய எண்ணங்களை நமக்குள் தோற்றுவிக்கும். ஒவ்வொரு காட்சியையும் பார்த்து பார்த்து செதுக்கியிருந்தார், கமல்.
இப்படத்தின் இரண்டாம் நாயகனாக, மாதவன். வெறுப்பை, கண்ணீரை தேவையான அளவில் வெளிப்படுத்தி இருந்தார். இக்கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தவர், அரவிந்த் சாமி.கிரண், நாசர், கம்யூ., தோழர்கள் என, படத்தில் இடம்பெற்ற அனைவரும், கதையை சுமந்திருந்தனர். இப்படத்தில், மதனின் வசனங்கள், ஹைலைட்டாக அமைந்தன.
தமிழகத்தை சுனாமி தாக்கும் முன், இப்படத்தில் இடம்பெற்ற சுனாமி பற்றிய வசனம் இடம்பெற்றிருக்கும். இது, ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. வித்யாசாகர் இசையில், யார் யார் சிவம், ஏலே மச்சி, பூ வாசம், நாட்டுக்கொரு செய்தி... பாடல்கள் வெகு சிறப்பாக இருந்தன.
அன்பு தான் சார் கடவுள்!