ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
பாலிவுட்டின் பிரபல நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ். அலாவுதீன் படத்தில் அறிமுகமான அவர் மர்டர் 2, ஹவுஸ்புல் 2, ரேஸ் 2, கிக், ராய், பாகி 2, ஜூட்வா 2, ராதே, பூத் போலீஸ் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது பச்சன் பாண்டே, அட்டாக், விக்ராந்த் ராணா (தெலுங்கு), சர்குஸ், ஹரி ஹர வீர மல்லு(தெலுங்கு) ராம் சேது படங்களில் நடித்து வருகிறார்.
ஜாக்குலின் படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தாலும் சமூக சேவையிலும் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். தற்போது பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நதிக்கரை தூய்மைப்பணிகளில் ஈடுபட்டுள்ளார். மும்பை மேற்கில் அரபிக் கடலை ஒட்டியுள்ள நதிக்கரையை ஜாக்குலின் தூய்மைப்படுத்தும் பணியை சில தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து செய்து வருகிறார்.