வாழ்க்கை அழகானது... வரும் வாய்ப்பை விட்டுவிடாதீர்கள் : ரெட்ரோ பட விழாவில் சூர்யா பேச்சு | குஷ்புவின் எக்ஸ் தளத்தை முடக்கிய ஹேக்கர்கள் | சம்மரில் சூடு பிடிக்கும் தமிழ் சினிமா | மண்டாடி : திறமையான கூட்டணியுடன் களமிறங்கும் சூரி | ரீ என்ட்ரி தரும் அப்பாஸ் | திருமணம் பற்றி த்ரிஷா சொன்ன 'தக் லைப்' | நள்ளிரவில் போன் செய்து கஞ்சா கேட்டார் : மஞ்சும்மேல் பாய்ஸ் நடிகர் மீது தயாரிப்பாளர் குற்றச்சாட்டு | தமிழகத்தில் அதிக வசூல் செய்த டாப் 5 படங்கள்...!! | இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் |
கடந்த 2000ம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்ற லாரா தத்தா, அர்ஜுன் நடித்த அரசாட்சி படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். தற்போது அக்ஷய் குமார் நடிப்பில், ஹிந்தியில் வெளியாகியுள்ள பெல்பாட்டம் படத்தில் மறைந்த இந்திய பிரதமர் இந்திரா காந்தியின் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் லாரா தத்தா. டிரெய்லரை பார்த்த போதே இவரது உருவ மாற்றத்தை கண்டு வியந்தவர்கள், படத்தை பார்த்துவிட்டு அவர் இந்திரா காந்தியின் சாயலில் இருப்பதாகவும் அவரது நடை உடை பாவனைகளை அச்சு அசலாக பிரதிபலித்து இருப்பதாகவும் பாராட்டி வருகின்றனர்.
ஒருபக்கம் இந்திராகாந்தியின் ஒப்பனை சரியாக பொருந்தி விட்டது என்றாலும் உருவத்திலும் சரி நடிப்பிலும் சரி இந்திராகாந்தி குறித்த சிறு சிறு நுணுக்கமான விஷயங்களை கூட லாரா தத்தா மிகச்சரியாக செய்வதற்கு உதவியது லாராவின் தந்தை கொடுத்த பல தகவல்கள் தானாம். லாராவின் தந்தை இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது அவரது பர்சனல் விமான பைலட்டாக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், அவரை அருகில் இருந்து கவனித்தவர் என்கிற முறையில் லாரா தத்தா இந்திராகாந்தியின் கதாபாத்திரத்தை மிகச்சரியாக பிரதிபலிப்பதற்கு உதவியுள்ளார் அவரது தந்தை.