இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

அக்ஷய்குமார். நடித்துள்ள பெல்பாட்டம் இந்தி படம் கடந்த 19ம்தேதி மகாராஷ்டிரா மாநிலம் தவிர மற்ற இந்தி பேசும் மாநிலங்களில் தியேட்டரில் வெளியானது. இதுதவிர அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட பல வெளிநாடுகளிலும் வெளியானது.
இந்த படம் இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது நடந்த பயணிகள் விமான கடத்தலை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது. இந்த படத்தில் அரபு நாடுகள் பற்றி தவறாக சித்தரிக்கும் காட்சிகள் இடம் பெற்றிருப்பதாக கூறி சவுதி அரேபியா, கத்தார், குவைத் ஆகிய நாடுகள் படத்திற்கு தடை விதித்துள்ளது.
இந்த படத்தில் அக்ஷய்குமாருடன், வாணிகபூர், லாரா தத்தா, கியூமா குரோஷி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ரஞ்சித் எம்.திவாரி இயக்கி உள்ளார்.