கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் | பிளாஷ்பேக் : எம்.எஸ்.பாஸ்கருக்கு விருது கிடைத்திருக்க வேண்டிய கதாபாத்திரங்கள் | மீண்டும் விசாரணைக்கு வருகிறது மான்வேட்டை வழக்கு | வசூலை குவிக்கும் இந்திய அனிமேஷன் படம் | சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்கும் குழந்தைகள் சினிமா | பார்க்கிங் படத்துக்கு 3 விருதுகள் : இயக்குனர், ஹீரோ, எம்.எஸ்.பாஸ்கர் நெகிழ்ச்சி | புது சாதனை படைக்குமா 'கூலி' டிரைலர் | கல்லீரல் பிரச்னையால் அவதிப்படும் தனுஷ் பட நடிகர் : கேபிஒய் பாலா ஒரு லட்சம் உதவி |
பிரபல ஹிந்தி நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா, ஆபாச வீடியோக்கள் தயாரித்து அதனை மொபைல் செயலியில் பதிவேற்றம் செய்து பரப்பிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது தாயார் இருவர் மீது புதிதாக மோசடி வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
லக்னோ காவல் நிலையத்தில் ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது தாயார் சுனந்தா இருவர் மீதும் 2 தனித்தனி மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஷில்பா ஷெட்டி சில ஆண்டுகளுக்கு முன்னர் 'லோசிஸ் வெல்னஸ் சென்டர்' என்ற பெயரில் நாடு முழுவதும் பிட்னஸ் சென்டர்(உடற்பயிற்சி மையம்)களை திறந்தார். இதற்காக ஒவ்வொரு பகுதியிலும் இந்த சென்டர்களை திறக்க பலரிடம் கோடிக்கணக்கில் ஷில்பா ஷெட்டி பணம் வாங்கியதாக சொல்லப்படுகிறது.
அதன் பிறகு அந்த தொழிலை மூடிவிட்டார். லக்னோவை சேர்ந்த ஜோத்ஜனா சவுகான், ரோகித் வீர் சிங் ஆகியோர் நடிகை ஷில்பா ஷெட்டியிடம், பிட்னஸ் சென்டர் கிளைகளை தொடங்க கோடிக்கணக்கில் பணம் கொடுத்ததாகவும், ஆனால் கிளைகள் தொடங்கப்படவும் இல்லை, அதோடு ஷில்பாஷெட்டி பணத்தையும் திரும்ப கொடுக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. இதையடுத்து இருவரும் போலீசில் புகார் செய்துள்ளனர். போலீசார் வழக்கு பதிவு செய்து ஷில்பா ஷெட்டிக்கும் அவரது தாயார் சுனந்தாவுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
ஷில்பா ஷெட்டி நடத்திய அந்த நிறுவனத்தில் ஷில்பா தலைவராகவும், அவரது தாயார் இயக்குநராகவும் இருந்தனர். எனவேதான் இரண்டு பேருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பாக லக்னோ கிழக்கு பகுதி டிஜிபி சஞ்சீவ் அளித்த பேட்டியில், ''நடிகை ஷில்பா, அவரின் தாயாரிடம் விசாரணை நடத்த விசாரணை அதிகாரி மும்பை செல்ல இருக்கிறார். இவ்வழக்கு அனைத்து கோணத்திலும் விசாரிக்கப்படும். முக்கிய பிரமுகர் இவ்வழக்கில் தொடர்பு கொண்டு இருப்பதால் விசாரணை தீவிரமாக கவனிக்கப்படுகிறது” என்று தெரிவித்தார்.