பிளாஷ்பேக் : எம்.எஸ்.பாஸ்கருக்கு விருது கிடைத்திருக்க வேண்டிய கதாபாத்திரங்கள் | மீண்டும் விசாரணைக்கு வருகிறது மான்வேட்டை வழக்கு | வசூலை குவிக்கும் இந்திய அனிமேஷன் படம் | சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்கும் குழந்தைகள் சினிமா | பார்க்கிங் படத்துக்கு 3 விருதுகள் : இயக்குனர், ஹீரோ, எம்.எஸ்.பாஸ்கர் நெகிழ்ச்சி | புது சாதனை படைக்குமா 'கூலி' டிரைலர் | கல்லீரல் பிரச்னையால் அவதிப்படும் தனுஷ் பட நடிகர் : கேபிஒய் பாலா ஒரு லட்சம் உதவி | ‛ஹிருதயம் லோபலா' பாடல் நீக்கம் ஏன் ? : கிங்டம் தயாரிப்பாளர் புது விளக்கம் | ஆகஸ்ட் 3 முதல் மலையாள பிக்பாஸ் சீசன்-7 துவக்கம் | போட்டியின்றி இணைச் செயலாளராக தேர்வான் ‛திரிஷ்யம்' நடிகை |
சந்தானம் நடித்த வாலிப ராஜா படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் நுஷ்ரத் பரூச்சா. பாலிவுட் நடிகையான இவர் தாஜ்மஹால் என்ற தெலுங்கு படத்திலும் நடித்துள்ளார். ஆகாஷ் வாணி, சோனு கீ திட்டு கி ஸ்வீட்டி, ஜெய் சந்தோஷி மா உள்பட பல பாலிவுட் படங்களில் நடித்துள்ளார். பல படங்களில் ஒரு பாடலுக்கு ஆடி உள்ளார். தற்போது ராம்சேது, சோரி, ஹர்டங் படங்களில் நடித்து வருகிறார்.
இவர் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடந்து வருகிறது. படப்பிடில் கலந்து கொண்ட நுஷ்ரத் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நுஷ்ரத் உடல்நிலை பற்றி பல்வேறு தகவல்கள் வெளிவந்தது.
இந்த நிலையில் அவர் தனது உடல்நிலை குறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியிருப்பதாவது: எனக்கு மன அழுத்த பிரச்சினை இருக்கிறது. இதற்கான நான் சிகிச்சை எடுத்து வருகிறேன். இந்த நிலையில் 20 நாட்களுக்கு மேல் தொடர்ச்சியாக படப்பிடிப்பில் கலந்து கொண்டேன். இதனால் மன அழுத்தமும், பதற்றமும் அதிகமாகி மயங்கி விழுந்தேன்.
எனக்கு கொரோனா உள்ளிட்ட வேறு எந்த உடல் பிரச்சினையும் இல்லை. தற்போது ஓய்வில் இருக்கிறேன். டாக்டர்கள் 15 நாள் ஓய்வெடுக்க சொல்லியிருக்கிறார்கள். என் பெற்றோர் அருகில் இருந்து கவனித்து வருகிறார்கள். என்று அவர் தெரிவித்திருக்கிறார்.