மருமகனுக்காக படம் தயாரிக்கும் விஜய் ஆண்டனி | ரஜினியே ரத்தத்தை நம்பி தான் படம் எடுக்கிறார் : ராதாரவி பேச்சு | இந்து தர்மத்தை சினிமாவில் சொல்வதை நினைத்து பெருமைப்படுகிறேன் : ‛ஹனுமன்' ஹீரோ | பார்வையாளர்களின் பதிலை மட்டுமே மதிக்கிறேன் : பல்லவி ஜோஷி | 100 மில்லியன் கடந்த 'முத்த மழை' மேடைப் பாடல் | 'மிராய்' டிரைலரைப் பார்த்து வாழ்த்திய ரஜினிகாந்த் | அல்லு அர்ஜுன், பவன் கல்யாண் 'மனஸ்தாபம்' முடிவுக்கு வந்ததா ? | 'கைதி 2' படத்திற்கு இசை அனிருத்? | சமூக வலைத்தள கொள்ளையர்கள் : IFTPC காட்டம் | பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? |
சினிமாவில் வில்லன் நடிகராக அறியப்பட்டாலும் நிஜத்தில் ஹீரோவாக கொண்டாடப்படுகிறார் சோனுசூட். காரணம் கொரோனா காலத்தில் அவர் ஆற்றிய பணிகள். கொரோனா முதல் அலையின்போது புலம்பெயர்ந்த தொழிலாளர்களை பஸ், ரயில், விமானத்தில் ஏற்றி அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தார். இரண்டாவது அலையில் ஆக்சிஜன் வங்கிகளை ஏற்படுத்தி பணியாற்றி வருகிறார். இதுதவிர ஏராளமான உதவிகளை அவர் செய்து வருகிறார்.
இந்த நிலையில் அவர் திடீரென முட்டை, ரொட்டி விற்கும் வியாபாரத்தில் இறங்கி விட்டார். தனது வீட்டில் தினமும் சைக்கிளில் முட்டை மற்றும் பிரட்டுகளை எடுத்துக் கொண்டு தெருத் தெருவாக சென்று விற்று வருகிறார். மற்ற பணிகள் எல்லாம் சரி. இது விளம்பரத்துக்காக செய்கிறார் என்று சிலர் நினைக்கலாம்.
அவர் தரும் விளக்கம் இது: இந்த வியாபாரத்தில் கிடைக்கும் லாபத்தை கொரோனா பணிகளுக்கு பயன்படுத்த இருக்கிறேன். அதைவிட முக்கியமாக இந்த கொரோனா காலத்தில் பலரும் வேலை இழந்திருக்கிறார்கள். அவர்கள் இதுபோன்ற சிறுசிறு வியாபாரத்தில் ஈடுபட்டு தங்கள் வாழ்க்கை பிரச்சினையை தீர்க்க முன்வர வேண்டும். அதற்கு அவர்களுக்கு தயக்கமோ, வெட்கமோ இருக்ககூடாது என்பதற்காக நானே முன்மாதிரியாக இருந்து செய்து காட்டுகிறேன். என்கிறார் சோனுசூட்.