பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி | டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது? | டிரைலர் உடன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த அதர்வாவின் தணல் படக்குழு! | 'குட்டி ஏஐ அனுஷ்கா' வீடியோ பகிர்ந்த அனுஷ்கா | வெளிநாடுகளில் 20 மில்லியன் டாலர் வசூலித்த 'கூலி' |
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜின் வாழ்க்கை சபாஷ் மிது என்ற பெயரில் இந்தியில் படமாகி வருகிறது. இதில் மிதாலி ராஜாக நடிகை டாப்ஸி நடிக்கிறார். இதற்காக அவர் மிதாலி ராஜிடமே கிரிக்கெட் கற்று நடித்து வருகிறார். இதனை ராகுல் தொலாக்கியா இயக்கி வந்தார். இந்நிலையில் படத்தில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: சபாஷ் மிது கதையை படித்ததுமே இந்த படத்தை நிச்சயம் இயக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. படப்பிடிப்பை 2019ல் தொடங்கினோம். தற்போது இந்த படத்தை தொடர்ந்து இயக்க முடியாத நிலையில் இருக்கிறேன். ஆனாலும் சபாஷ் மிது பட படக்குழுவினருக்கு உதவியாக இருப்பேன். கொரோனா பரவல் எல்லோருடையை வேலைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. நானும் அதில் இருந்து தப்பவில்லை. படக்குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார். தற்போது ராகுலுக்கு பதிலாக ஸ்ரீஜித் முகர்ஜி இயக்குகிறார்.