'கூலி' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | 'கைதி 2' அப்டேட் தந்த கார்த்தி | ஏஆர் ரஹ்மானுக்கு திடீர் உடல்நலக்குறைவு: நலமாக உள்ளதாக குடும்பத்தினர் தகவல் | 'எல் 2 எம்புரான்' படத்திலிருந்து விலகியதா லைக்கா? | டெஸ்ட் கதை பற்றி பகிர்ந்த நயன்தாரா | எனது கேரியரையே மாற்றிய படம் டிராகன் : கயாடு லோஹர் | ஹரி ஹர வீர மல்லு படத்தின் ரிலீஸ் தள்ளிவைப்பு | இளைஞர்களுக்கு வேண்டுகோள் விடுத்த மோகன் ராஜா | சலார் 2வை தள்ளி வைத்த பிரபாஸ் | நிம்மதியா வாழ விடுங்க : நடிகர் பாலாவின் மூன்றாவது மனைவிக்கு நான்காவது மனைவி எச்சரிக்கை |
இந்தியாவின் பெரைய பாரத் என்று மாற்றுங்கள் என்று நடிகை கங்கனா ரணவத் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது: இந்தியா என்ற பெயர் அடிமைப் பெயர் போல் இருக்கிறது. உடனே அதை மாற்றி, நமது நாட்டின் பழைய பெயரான பாரதம் என்பதை வைக்க வேண்டும். நகர்ப்புற வளர்ச்சியில் நாம் உயர்ந்தாலும், மேற்கத்திய நாடுகளின் மலிவான நகல் போன்று இல்லாமல், வேதங்கள் மற்றும் பகவத் கீதை, யோகாவில் ஆழமாக வேரூன்றி இருந்தால், உலகின் மிகப்பெரிய நாடாக நாம் வெளிப்படுவோம். எனவே தான் அடிமைப் பெயரான இந்தியாவுக்கு பதிலாக பாரத் என்று மாற்ற சொல்கிறேன்.
இந்தியா என்ற அடிமைப் பெயரை பிரிட்டீஷ்காரர்கள் நமக்கு கொடுத்தார்கள். அதாவது, சிந்து நதியின் கிழக்குப் பகுதியை குறிக்கும் வகையில் இது கொடுக்கப்பட்டது. நாம் அடிமைப்படுத்தப்படுவதற்கு முன்பாகவே கலாச்சாரம் மிகுந்தவர்களாகவும், நாகரீகம் மிகுந்தவர்களாகவும் இருந்தோம். எனவே, பழைய பெயரான பாரத் என்று மாற்றி, இழந்த பெருமையை மீட்போம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.