ஹைதராபாத்தில் அனிருத் நடத்தும் 'கூலி' இசை நிகழ்ச்சி! | ரியல் பிரபாஸூடன் நடித்த நிதி அகர்வால்! | ஜீவாவின் 46வது படத்தை இயக்கும் கே.ஜி.பாலசுப்பிரமணி! | ஆகஸ்ட் 29ல் தனது பிறந்த நாளில் குட் நியூஸ் வெளியிடும் நடிகர் விஷால்! | கமலின் 237வது படத்தில் நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்! | நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வரும் அதர்வாவின் தணல்! | நாளை ரீரிலீஸ் ஆகும் பாட்ஷா படம்! | இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார் | ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் என்ன...? : ஒரு பார்வை! | போலீசார் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : திரிதா சவுத்ரி |
ஹிந்தி, தெலுங்கு சினிமாக்களில் உள்ள மெகா ஹீரோக்களை வைத்து பல பிரமாண்ட படங்களை இயக்கியவர் ராம்கோபால்வர்மா. ஆனால் சமீபகாலமாக மிகக்குறைவான பட்ஜெட்டில் சர்ச்சைக்குரிய ஆபாசக்கதைகளை படமாக்கி வருகிறார். அதோடு பிரபலங்கள் குறித்த சர்ச்சையான கருத்துக்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு சர்ச்சை இயக்குனர் என்ற பட்டத்தையும் பெற்றிருக்கிறார்.
இப்படியான நிலையில் தற்போது பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சனை வைத்து ஒரு மெகா படத்தை இயக்க தயாராகிக் கொண்டிருக்கிறார் ராம்கோபால்வர்மா. அதற்கான ஸ்கிரிப்ட் வேலைகளை தொடங்கி விட்டவர், அமிதாப்பச்சனின் கால்சீட் கிடைத்து விட்டால் 2022ம் ஆண்டில் அந்த படத்தை எடுத்து வெளியிடவும் திட்டமிட்டுள்ளார்.
இதற்கு முன்பு அமிதாப்பச்சன் - ராம் கோபால் வர்மா கூட்டணியில் உருவான சர்கார், நிஷாபத், ரான், டிப்பார்ட்மென்ட் ஆகிய படங்கள் வரிசையில் இந்த புதிய படமும் மெகா பட்ஜெட்டில் தயாராக உள்ளதாம்.