'ஜனநாயகன்' டிரைலர் : எதிர்பார்ப்புகள் என்ன ? | தமிழில் முதல் வெற்றியைப் பெறுவாரா பூஜா ஹெக்டே ? | இன்று ஒரே நாளில் மூன்று முக்கிய வெளியீடுகள் | சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் |

கொரோனா வைரசின் 2வது அலை நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. தடுப்பு மருந்து தட்டுப்பாடு, ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவுகிறது. உலக நாடுகள் இந்தியாவுக்கு தடுப்பு மருந்தும், ஆக்சிஜனும் அனுப்பி வருகிறது. பல திரைப்பிரபலங்கள் வெளியே தெரிந்தும், தெரியாமலும் உதவி செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் டில்லியில் உள்ள கொரோனா சிகிச்சை மருத்துவ மையத்துக்கு 2 கோடி நிதி உதவி வழங்கி உள்ளார். 300 படுக்கை வசதிகள் கொண்ட இந்த மருத்துவ மையத்துக்கு ஆக்சிஜன் சிலிண்டர்களையும் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து வழங்கி இருக்கிறார்.
இதுகுறித்து அமிதாப்பச்சன் கூறியிருப்பதாவது: செய்த உதவிகளை வெளியே சொல்வதில் எனக்கு விருப்பம் இல்லை. கொரோனா ஆரம்பித்ததில் இருந்து சிகிச்சை பெறுவோருக்கும், புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கும், முன்களப் பணியாளர்களுக்கும், விவசாயிகளுக்கும் ஏராளமான உதவிகளை செய்து இருக்கிறேன். என்கிறார்.