'டியூட்' மீது அதிக நம்பிக்கை வைத்துள்ள குழு | திருமணமா.. அப்படியே ஹனிமூனையும் சொல்லிடுங்க..!: திரிஷா கிண்டல் | புதுவை முதல்வருடன் தயாரிப்பாளர்கள் சந்திப்பு | போலி சாமியாராக நட்டி | ரஜினி பெயரில் புதிய படம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்காக நடத்தப்பட்ட குதிரை பந்தயம் | பிளாஷ்பேக்: 100 தியேட்டர்களில் வெளியான முதல் படம் | ஷாருக்கான் பிறந்தநாளில் ‛கிங்' பட முதல் பார்வை | ஜனவரியில் துவங்கும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படம் | த்ரிஷாவுக்கு விரைவில் திருமணம் என பரவும் தகவல் |
கடந்த 2009ல் சல்மான்கானை வைத்து வான்டட் என்கிற படத்தின் மூலம் பாலிவுட்டிலும் இயக்குனராக நுழைந்தார் பிரபுதேவா. அதைத்தொடர்ந்து தபாங் படத்தின் மூன்றாம் பாகமான 'தபாங்-3'யிலும் சல்மான்கானை இயக்கினார். இதோ இப்போது மூன்றாம் முறையாக சல்மான்கானை வைத்து பிரபுதேவா இயக்கியுள்ள படம் 'ராதே'. கிட்டத்தட்ட 250 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த படம் கடந்த வருடமே ரிலீசுக்கு தயாராகி விட்டது. ஆனால் கொரோனா தாக்கம் காரணமாக ரிலீஸ் தள்ளிப்போனது.
இந்தநிலையில் தற்போது ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இந்தபடம் மே-13ஆம் தேதி வெளியாக உள்ளது. இதற்கு முன்னதாக படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் எந்தவித கட்டும் சொல்லாமல் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் அளித்தனர். ஆனால் பிரபுதேவாவும் சல்மான் கானும் என்ன நினைத்தார்களோ தெரியவில்லை, குடும்பத்துடன் அனைவரும் இந்தப்படத்தை பார்க்க வேண்டும் என்பதற்காக படத்தில் 21 இடங்களில் மாற்றங்களை செய்துள்ளார்களாம்.