சின்னத்திரை சீரியலில் என்ட்ரி கொடுக்கும் கவுதமி! | குழந்தைகள் தினத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்ட விழிப்புணர்வு செய்தி! | சொர்க்கவாசலில் ஜெயில் கைதிகளின் வாழ்க்கை | 'எனை சுடும் பனி': மீண்டும் ஒரு பொள்ளாச்சி கதை | 'ப்ரீடம் அட் மிட்நைட்': இன்று வெளியானது | பிளாஷ்பேக்: லைவ் சவுண்டில் உருவான 'தூரத்து இடி முழக்கம்' | யஷ், நயன்தாரா படத்திற்காக வெட்டப்பட்ட நூற்றுக்கணக்கான மரங்கள் | பிளாஷ்பேக்: அந்த காலத்து வாலிபர் சங்கம் | லக்கி பாஸ்கரை தொடர்ந்து மீனாட்சி சவுத்ரி நடிப்பில் இரண்டு தெலுங்கு படங்கள் ரிலீஸ்! | வெண்ணிலாவாக தெலுங்கில் அறிமுகமாகும் அதிதி ஷங்கர்: பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு |
கொரோனா வைரஸ் இரண்டாவது அலை இந்தியாவில் கோரதாண்டவம் ஆடி வருகிறது. பாதிப்படைபவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. . ஆக்சிஜன் பற்றாக்குறை, தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
கொரோனாவின் 2வது அலையை எதிர்த்து போராட பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் ஒரு கோடி ரூபாயை கடந்த சில தினங்களுக்கு முன்பு வழங்கினார். இப்போது பாலிவுட் மற்றும் ஹாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா நிதி திரட்டும் பணியில் இறங்கி உள்ளார். கிவ் இந்தியா என்ற அமைப்புடன் இணைந்து இந்த பணியில் இறங்கி உள்ளார். இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் வெளியிட்டள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:
கொரோனா பற்றி நாம் ஏன் கவலைப்பட வேண்டும்? இப்போது ஏன் இவ்வளவு அவசரம் என்று கேட்கலாம். நான் லண்டனில் உட்கார்ந்துக் கொண்டு இருக்கிறேன். எனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் இந்தியாவில் இருக்கிறார்கள். மருத்துவமனைகள் திறன் கொண்டவையாக இல்லை, ஐ.சி.யூகளில் அறைகள் இல்லை, ஆம்புலன்ஸ்கள் மிகவும் பிஸியாக உள்ளன, ஆக்ஸிஜன் வழங்கல் குறைவாக உள்ளது.
நாளுக்கு நாள் மரணத்தின் அளவு அதிகரித்து வருகிறது. இந்தியா எனது வீடு, இந்தியா தற்போது மோசமான நிலையில் உள்ளது உங்களால் முடிந்த உதவியை செய்து இந்த தொற்றுநோயைத் தடுக்க உதவுங்கள், தயவுசெய்து நன்கொடை அளிக்கவும். நிறைய பேர் கோபமாக இருக்கலாம். நான் ஏன் இதை செய்ய வேண்டும் என்று அவசரத்தை புரிந்து கொள்ளுங்கள் தயவு செய்து நன்கொடை அளியுங்கள். உங்களால் முடிந்த உதவியை இந்தியாவுக்கு செய்யுங்கள் என்று அந்த வீடியோவில் அவர் பதிவிட்டு இருந்தார்.
இந்த வீடியோ பதிவிற்கு பிறகு 24 மணி நேரத்திற்குள் ஒரு கோடியே 85 லட்சம் ரூபாய் நிதி குவிந்துள்ளது. இந்த பணம் பெங்களூர் மற்றும் மும்பைக்கு ஆக்சிஜன் வாங்க பயன்படுத்தப்படும் என்று பிரியங்கா குறிப்பிட்டிருக்கிறார். தொடர்ந்து நிதி குவிந்து வருகிறது.