சுஹர்ஷ் ராஜ் நடித்த மியூசிக் வீடியோ: அனூப் ஜலோடா, பாடகி மதுஸ்ரீ பாராட்டு | ஆண்டனி வர்கீஸ் நடிக்கும் 'காட்டாளன்' பர்ஸ்ட்லுக்கு வெளியீடு | தீபாவளிக்கு வெளியாகும் 'கருப்பு' படத்தின் முதல் பாடல்! | கார்த்தி, விஜய் சேதுபதி போன்ற நடிகர்களால் தான் நல்ல கதை பெரிய படமாக வருகிறது! நலன் குமாரசாமி | சம்பளத்தை குறைத்து கொண்ட விக்ரம்! | ஹ்ரித்திக் ரோஷன் தயாரிப்பில் உருவாகும் புதிய வெப் தொடர் | அர்ஜுன் படத்தின் புதிய அப்டேட்! | 'சீன்'களை திருடும் இயக்குனர் | நான் ‛அப்புக்குட்டி' ஆனது இப்படித்தான் | ரசிகர்கள் 'இன்டலிஜென்ட்': சாய் பிரியா சர்டிபிகேட் |
சின்னத்திரையில் பல மொழிகளில் ஒளிபரப்பான பிரமாண்ட புராணத் தொடர் ஸ்ரீகிருஷ்ணா. இதில் பீஷ்மராக நடித்து புகழ்பெற்றவர் சுனில் நாகர். அதன்பிறகு ஹனுமான் தொடரில் பிரம்மனாக நடித்திருந்தார். சில இந்திப் படங்களிலும் நடித்துள்ளார். தற்போது தான் மிகவும் வறுமையில் வாடுவதாகவும், தன்னை மகன்கள் கைவிட்டு விட்டனர் என்றும் கூறியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது: நடிப்பின் உச்சத்தில் இருந்தபோது சம்பாதித்த பணத்தை எல்லாம் என் மகனின் படிப்புக்கும், வளர்ச்சிக்கும் செலவு செய்தேன். ஆனால் இப்போது எனக்கு நடிப்பு வாய்ப்பும் இல்லை. முதுமையும் அடைந்து விட்டேன். இந்த நிலையில் என் மகன் என்னை கைவிட்டு விட்டான். உறவினர்களும் கைவிட்டு விட்டனர்.
தற்போது வாடகை வீட்டில் தனியாக வசித்து வருகிறேன். அந்த வீட்டிற்கும் என்னால் வாடகை கொடுக்க முடியவில்லை. நட்சத்திர ஓட்டல்களில் பாடல் பாடி அதன்மூலம் கிடைத்த வருமானத்தில் வாழ்ந்து வந்தேன். இப்போது கொரோனா காலத்தில் அந்த வேலையும் இல்லை. இதனால் எனக்கு உதவி செய்யுமாறு கேட்டு இந்தி நடிகர் சங்கத்திடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.