தீபாவளிக்கு வெளியாகும் 'கருப்பு' படத்தின் முதல் பாடல்! | கார்த்தி, விஜய் சேதுபதி போன்ற நடிகர்களால் தான் நல்ல கதை பெரிய படமாக வருகிறது! நலன் குமாரசாமி | சம்பளத்தை குறைத்து கொண்ட விக்ரம்! | ஹ்ரித்திக் ரோஷன் தயாரிப்பில் உருவாகும் புதிய வெப் தொடர் | அர்ஜுன் படத்தின் புதிய அப்டேட்! | 'சீன்'களை திருடும் இயக்குனர் | நான் ‛அப்புக்குட்டி' ஆனது இப்படித்தான் | ரசிகர்கள் 'இன்டலிஜென்ட்': சாய் பிரியா சர்டிபிகேட் | பிளாஷ்பேக்: ஒரு செல்லாத ரூபாயின் கதை தந்த யோசனை, என் எஸ் கிருஷ்ணனின் “பணம்” திரைப்படம் | தில்லானா மோகனாம்பாள், அவ்வை சண்முகி, ஜெயிலர் - ஞாயிறு திரைப்படங்கள் |
பிரபுதேவா இயக்கத்தில் சல்மான்கான், திஷா பதானி மற்றும் பலர் நடித்துள்ள படம் 'ராதே'. இப்படத்தில் இடம் பெற்றுள்ள 'சீட்டிமார்' என்ற பாடல் சில தினங்களுக்கு முன்பு யு டியூபில் வெளியிடப்பட்டது.
தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பில், சல்மான், திஷா இருவரும் நடனமாடிய இப்பாடல் யு டியூபில் புதிய சாதனை ஒன்றைப் படைத்திருக்கிறது. குறுகிய காலத்தில் 50 மில்லியன் பார்வைகளை இப்பாடல் பெற்றுள்ளது.
3 நாட்கள் 9 மணி நேரங்களில் அந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு 'கர்மி' பாடல் 4 நாட்களில் 11 மணி நேரத்தில் படைத்த சாதனையை 'சீட்டிமார்' முறியடித்துள்ளது.
தெலுங்கில் 'துவ்வட ஜகன்னாதம்' படத்தில் தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பில், அல்லு அர்ஜுன், பூஜா ஹெக்டே நடனமாடிய 'சீட்டிமார்' பாடலைத்தான் ஹிந்தி 'ராதே'வில் மீண்டும் உருவாக்கியிருக்கிறார்கள்.
அல்லு அர்ஜுன் அளவிற்கு சல்மான்கான் சிறப்பாக நடனமாடவில்லை என்பதுதான் ரசிகர்களின் கருத்தாக உள்ளது. இருப்பினும் பாடல் யு டியுபில் அதிக பார்வைகளைப் பெற்று வருகிறது.