பிளாஷ்பேக்: ஒரு செல்லாத ரூபாயின் கதை தந்த யோசனை, என் எஸ் கிருஷ்ணனின் “பணம்” திரைப்படம் | தில்லானா மோகனாம்பாள், அவ்வை சண்முகி, ஜெயிலர் - ஞாயிறு திரைப்படங்கள் | கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு | மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை |
ஜெயலலிதாவின் பயோபிக் படமான தலைவி படத்தில் அவரது கதாபாத்திரத்தில் நடிப்பதன் மூலம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிழ் சினிமாவிற்கு வந்துள்ளவர் ஹிந்தி நடிகை கங்கனா ரணவத்.
பாலிவுட்டில் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கும் கங்கனா திரையுலகத்திற்கு வந்து இன்றுடன் 15 வருடங்கள் ஆகிறது. தன்னுடைய திரையுலகப் பயணத்தை ஷாரூக்கானுடன் ஒப்பிட்டு அவர் இன்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
“15 வருடங்களுக்கு முன்பு, இன்று தான் கேங்ஸ்டர் படம் வெளியானது. ஷாரூக்கான் ஜி மற்றும் நான் ஆகிய இருவருடைய கதைகள் தான் மிகப் பெரும் வெற்றிக் கதைகள். ஆனால், ஷாரூக்கான டில்லியிலிருந்து வந்தவர், கான்வென்ட்டில் படித்தவர், அவருடைய பெற்றோர் சினிமாவில் இருந்தனர்.
எனக்கு ஒரு வார்த்தை கூட ஆங்கிலம் தெரியாது, படிப்பு கிடையாது, ஹிமாச்சல் பிரதேசத்தின் ஒரு தொலைதூர கிராமத்திலிருந்து வந்தவள். என் வாழ்வை பரிதாபமாக்கிய, என்னுடைய அப்பா, தாத்தா ஆகியோரிடம் சண்டையிட்டு ஒவ்வொரு அடியாக போராடித்தான் வந்தேன். 15 ஆண்டுகளுக்குப் பிறகு, இவ்வளவு வெற்றிக்குப் பின்னும், வாழ்வதற்கு ஒவ்வொரு நாளும் போராடித்தான் வருகிறேன், ஆனால் முற்றிலும் மதிப்பானவை அவை. ஒவ்வொருவருக்கும் நன்றி,” என தன்னுடைய 15 வருட திரையுலக அனுபவம் குறித்து குறிப்பிட்டுள்ளார்.