ஆயிரம் கோடி வசூல் கனவு….காத்திருக்கம் தமிழ் சினிமா…. | என்டிஆர் - நீல் படப்பிடிப்பு ஆரம்பம்: 'சலார், கேஜிஎப் 3' நடக்குமா? | 'வின்னர், கிரி' - காமெடியை மீண்டும் தருமா 'கேங்கர்ஸ்' கூட்டணி | இளையராஜா பாடலால் 'குட் பேட் அக்லி' ஹிட்டானதா?: கங்கை அமரன் பேச்சுக்கு மகன் பிரேம்ஜி சொன்னது என்ன? | உண்மை கதையில் யோகி பாபு | வெற்றி ஜோடியாக தமிழில் அறிமுகமாகும் தெலுங்கு நடிகை | 3 வருடங்களுக்கு பிறகு நாயகியாக திரும்பும் ஷ்ரத்தா | 'மாமன்' சூரியின் கதை: இயக்குனர் தகவல் | பிளாஷ்பேக்: பல தலைமுறைகளை வாழ வைத்த 'மைடியர் குட்டிச்சாத்தான்' | பிளாஷ்பேக்: காதல் சின்னத்தை மீட்டெடுக்க விரும்பிய வி.என்.ஜானகி |
கமல்ஹாசன் நடிப்பில் தமிழில் வெளிவந்த அவ்வை சண்முகி படத்தின் இந்தி ரீமேக்கான சாச்சி 420 படத்தில் கமல்ஹாசனின் மகளாக சிறு குழந்தையாக நடித்தவர் பாத்திமா சனா ஷேக். சமீபத்தில் ஆமீர் கானின் தங்கல் படத்தில் கீதா போகாத்தாக நடித்து பிரபலமானார்.
இந்நிலையில் சமீபத்தில் அவர் மர்ம நபர் ஒருவரால் தாக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: நான் ஜிம்மில் இருந்து திரும்பி வந்து கொண்டிருந்தபோது ஒரு ஆண் என்னையே பார்த்ததை கவனித்தேன். எதற்காக இப்படி பார்க்கிறாய் என்று கேட்டேன். அந்த நபரோ, அது என் இஷ்டம் என்றார்.
அறை வேணுமா என்று நான் கேட்டதற்கு அறையேன் என்றார். உடனே நான் அவரை அறைந்தேன், பதிலுக்கு அவர் என்னை குத்திவிட்டார். இதையடுத்து எனக்கு மயக்கம் வந்துவிட்டது. மயக்கம் தெளிந்த உடன் என் அப்பாவை அழைத்து நடந்ததை கூறினேன். அவர் மூன்று நபர்களை அழைத்துக் கொண்டு வந்தார். என்னை தாக்கியவர் ஓடத் துவங்கினார். அப்பாவும் நண்பர்களும் அவரை துரத்தினார்கள். ஆனால் அந்த ஆள் தப்பி விட்டான். தொடர்ந்து நம் நாட்டில் பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகவே இருக்கிறது. என்றார்.