ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
சலார் படப்பிடிப்பை கிட்டத்தட்ட முடித்துவிட்ட நடிகர் பிரபாஸ், தற்போது ஆதிபுருஷ் என்ற படத்தில் நடிக்கிறார். ராமாயணத்தை தழுவி பன்மொழில் 3டி தொழில்நுட்பத்தில் இப்படம் வெளியாக உள்ளது. தற்போது கொரோனா இரண்டாவது அலை காரணமாக மகாராஷ்டிராவில் நடைபெற்று வந்த இதன் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இதனால் இப்படத்தின் ரிலீசும் தாமதமாகும் நிலை உருவாகியிருக்கிறது.
இதனிடைய இப்படத்திற்கு முன்பாக நாக் அஸ்வின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க கமிட்டானார் பிரபாஸ் . ஹிந்தி நடிகை தீபிகா படுகோனே நாயகியாக அறிவிக்கப்பட்டார். இது சயின்ஸ் பிக்ஷன் சம்பந்தப்பட்ட கதையில் உருவாகிறது. உலகத்தரம் வாய்ந்த பிரமாண்ட செட் போடப்பட்டு ஒரு வருடம் வரை படப்பிடிப்பு நடைபெற உள்ளது. இதனால் இந்த படத்தை விட அதற்கு அடுத்து கமிட்டான சலார், ஆதிபுருஷ் படங்களுக்கு பிரபாஸ் முக்கியத்துவம் கொடுத்தார் பிரபாஸ். இதனால் இப்படத்தின் படப்பிடிப்பு இந்தாண்டு மத்தியில் துவங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது கொரோனா பிரச்னை நிலவுவதால் படப்பிடிப்பு மேலும் தள்ளிப்போக வாய்ப்புள்ளது.
இதனிடையே இப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் அமிதாப்பச்சன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே நாயகியாக ஹிந்தி நடிகை தீபிகா படுகோனே நடிக்க உள்ளார். இப்படத்தையும் பான் இந்திய படமாக உருவாக்குகின்றனர். அதனால் தான் ஹிந்தி பிரபலங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து இப்படத்தில் நடிக்க வைக்கின்றனர்.