ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
பிரபல இந்தி தொடர் நடிகை பாருல் சவுத்ரி. அனுபமா, தேரா மேரே சப்னே, ஏக் த ராஜா ஏக் த ராணி, பாபு ஆவுர் பாபி உள்பட 20க்கும் மேற்பட்ட தொடர்களில் நடித்துள்ளார். சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். பாருல் சவுத்ரிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று மீண்டார். இந்த நிலையில் அவருக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: எனக்கு கடந்த செப்டம்பர் மாதம் கொரோனா தொற்று ஏற்பட்டது. அப்போது கஷ்டமாக தெரியவில்லை. தற்போது 2-வது முறை கொரோனா தொற்று ஏற்பட்டு மிகவும் கஷ்டப்படுகிறேன். எனது அம்மா, அப்பா, சகோதரிக்கும் கொரோனா தொற்று உள்ளது. அனைவரும் வீட்டில் தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்று வருகிறோம். ஒரு முறை கொரோனா வந்தால் மீண்டும் வராது என்று இருக்காதீர்கள். கூட்டம் அதிகம் உள்ள இடங்களுக்கு சென்றால் கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. என்கிறார் பாருல் சவுத்ரி.