'டி என் ஏ'வை ஐஸ்வர்யா ராஜேஷ் பாராட்டியது ஏன் | விக்ரம்பிரபு பட விழாவில் ஆதிக்ரவிச்சந்திரன் | 'பறந்து போ' படத்திற்காக யுவன் சங்கர் ராஜா பாடிய பாடல் ஜூன் 24ல் ரிலீஸ்! | ஜனநாயகன் படப்பிடிப்பு தளத்தில் கூலாக இருந்த விஜய்! - மமிதா பைஜூ சொன்ன தகவல் | கமலிடம் நஷ்ட ஈடு கேட்கும் 'தக்லைப்' படத்தின் கர்நாடக விநியோகஸ்தர்! | 50வது நாளில் 'டூரிஸ் பேமிலி' | பி.எம்.டபிள்யூ எக்ஸ்-1 காரை வாங்கிய நடிகர் விதார்த்! | தனி விமானம் வாங்கினாரா சின்னத்திரை நடிகை? | சூர்யா 45வது படத்தின் டைட்டில் 'கருப்பு': போஸ்டர் வெளியிட்ட ஆர்.ஜே.பாலாஜி! | கன்னடத்தில் அடி எடுத்து வைத்த 'அனிமல்' பட நடிகர் உபேந்திரா |
கொடூர வில்லனாக நடித்துவந்த பாலிவுட் நடிகர் சோனு சூட், கொரோனா தாக்கத்திற்கு பின், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட பலதரப்பட்ட பலருக்கும், தான் செய்த உதவிகளால் மக்கள் மத்தியில் நிஜ ஹீரோவாகவே மாறிவிட்டார். அவருக்கென உருவாகி விட்ட புதிய இமேஜ் காரணமாக அவரை வில்லனாக நடிக்க வைக்க இயக்குனர்கள் தயங்குகிறார்கள்.. அவரும் இனி வில்லனாக நடிப்பதில்லை என முடிவெடுத்து விட்டார். இன்னும் ஒருவர் ஒருபடி மேலேபோய் சோனு சூட்டை வைத்து பாகல் நஹி ஹோனா என்கிற இசை ஆல்பத்தையே உருவாக்கி விட்டார்.
எல்லைக்கு செல்லும் ராணுவ வீரனுக்கும் அவனது காதலிக்குமான காதல் மற்றும் பிரிவு உணர்வுகளை மையப்படுத்தி இந்த இசை ஆல்பம் உருவாகி உள்ளது. இதில் முழுக்க முழுக்க ரொமான்ஸ் நாயகனாக மாறியுள்ளார் சோனு சூட். இந்த இசை ஆல்பத்தில் பாடியுள்ள சுனந்தா சர்மாவே இதில் சோனு சூட்டின் காதலியாகவும் நடித்துள்ளார். அவ்வி ஸ்ரா என்பவர் இசையமைத்துள்ள இந்த ஆல்பம் ராணுவ வீரர் தினத்தை முன்னிட்டு நேற்று வெளியாகி இதுவரை 12 மில்லியன் பேரால் பார்க்கப்பட்டுள்ளது.