தனுஷ், மோகன்லால் கூட்டணியை உருவாக்க முயற்சி | மீண்டும் தயாரிப்பில் களமிறங்கும் ஹிருத்திக் ரோஷன் | முகேன் ராவ் நடிக்கும் புதிய படம் நிறம் | காந்தி கண்ணாடி முதல் மதராஸி வரை.... ஒவ்வொன்னுன் செம வொர்த்.... இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா | அப்பா தம்பி ராமயைா கதை எழுத, மகன் உமாபதி இயக்கும் படம் | செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ' | தீபாவளிக்கு 'டியூட்' மட்டும் தானா? : பிரதீப் ரங்கநாதன் தகவல் | மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா | மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ? |
முசாபர் அலி இயக்கத்தில், ரேகா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்து 1981ம் ஆண்டு வெளிவந்த ஹிந்தித் திரைப்படம் 'உம்ராவ் ஜான்'. அந்தக் காலத்தில் இந்தப் படம் பெரும் வரவேற்பைப் பெற்ற ஒரு படமாக அமைந்தது. அந்த ஆண்டிற்கான தேசிய திரைப்பட விருதுகளில் ரேகாவுக்கு சிறந்த நடிகைக்கான விருதும் கிடைத்தது. மேலும், சிறந்த இசைக்காக முகம்மது ஜாகுர்கய்யம், , சிறந்த பின்னணிப் பாடகிக்காக ஆஷா போன்ஸ்லே, சிறந்த கலை இயக்கத்திற்காக மன்சூர் ஆகியோரும் தேசிய விருதுகளை வென்றார்கள்.
அந்தத் திரைப்படத்தை இந்தியத் திரைப்பட ஆவணக் காப்பகம், மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சக நிவாரணத்தைப் பெற்று, தற்போது 4 கே தரத்திற்கு இப்படத்தின் தரத்தை உயர்த்தியுள்ளது. 35 எம்எம் பிரிண்ட்டை வைத்து அதற்கு டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் உயிர் கொடுத்துள்ளார்கள்.
நாளை ஜுன் 27ம் தேதி தியேட்டர்களில் வெளியாக உள்ள இத் திரைப்படத்தின் பிரிமியர் காட்சியை மும்பையில் நடத்த உள்ளார்கள். அதில் நடிகை ரேகா கலந்து கொள்ள உள்ளார். மேலும், பாலிவுட்டின் இன்றைய முன்னணி நட்சத்திரங்கள் சிலரும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.