ஆண்கள் மட்டுமே நடித்துள்ள 'ஆகக் கடவன': நாளை ரிலீஸ் | மோகன்லாலின் வாழ்க்கை கதை புத்தகம்: டிசம்பரில் வெளியீடு | டாஸ்மாக் முறைகேடு வழக்கு: தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயனுக்கு சம்மன்? | அட்லிக்கு டாக்டர் பட்டம்: சத்யபாமா பல்கலைக்கழகம் வழங்குகிறது | பிளாஷ்பேக்: விநியோகஸ்தர்களுக்கு நஷ்டத்தை ஈடுகட்டிய என்.எஸ்.கிருஷ்ணன் | பிளாஷ்பேக்: விஜய் படத்தை நிராகரித்த அஜித் | ஹாட்ரிக் வெற்றி : மகிழ்ச்சியில் சிம்ரன் | ஜெயிலர் 2வில் யோகிபாபு | என்னை கொல்ல சதி நடக்குது: ஜாக்குவார் தங்கம் அலறல் | இடியாப்ப சிக்கலில் விஜயகாந்த் மகன் திரைப்படம் |
2004ம் ஆண்டு விஜய், திரிஷா நடித்த 'கில்லி' படம் முதல் முறை வந்த போது கூட முதல் நாளில் இவ்வளவு வசூலை அள்ளியிருக்க முடியாது. பண மதிப்பில் வித்தியாசம் இருக்கலாம். ஆனாலும், நேற்றைய ரீ-ரிலீசில் 'கில்லி' படம் சுமார் 8 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக முதல் கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ரீரிலீஸ் படங்களில் இதுவரை வெளிவந்த முந்தைய படங்களின் சாதனையையும் 'கில்லி' முறியடித்துள்ளதாம்.
அது மட்டுமல்ல நேற்று படம் பார்த்தவர்களின் எண்ணிக்கையும் ஒரு சாதனையில் சேர்ந்துள்ளது. இந்த 2024ம் ஆண்டில் முதல் நாளில் ஒரு படத்திற்குத் தியேட்டர்களுக்கு வந்து படம் பார்த்தவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக அமைந்துள்ளது. புதிய படங்களுக்குக் கூட அவ்வளவு பேர் வரவில்லையாம்.
படம் வெளியான பல தியேட்டர்களில் ரசிகர்கள் பாடல்களுக்கு எழுந்து நடனமாடுவது, பன்ச் வசனங்கள் வரும் போது கூடவே சேர்ந்து கத்திப் பேசுவது என தியேட்டர்களில் கொண்டாடி வருகிறார்களாம்.