2025ல் அதிக சம்பளம் வாங்கும் தென்னிந்திய நடிகை யார் ? | மும்பையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளை விற்பனை செய்த பிரியங்கா சோப்ரா! | ரெட்ரோ படம் சூர்யாவுக்கு மகிழ்ச்சி கொடுத்துள்ளது! - கார்த்திக் சுப்பராஜ் | 500 கோடி நிகர வசூலைக் கடந்த 'ச்சாவா' | சினிமா துறையில் பாலின பாகுபாடு: மாதுரி தீக்சித் கவலை | பிரபு, வெற்றி இணைந்து நடித்து ரிலீசுக்கு தயாரான 'ராஜபுத்திரன்' | 'ஹிட் 3' பார்க்காதீர்கள்: நானி சொன்ன காரணம் தெரியுமா? | ''ரசிகர்கள் மாறிவிட்டாங்க...'': ஷில்பா ஷெட்டி | 'அவள்' பட இயக்குனருடன் இணைகிறாரா ரவி மோகன்? | பராசக்தி இந்த காலகட்டத்திற்கு பொருந்தும்! - ஆகாஷ் பாஸ்கரன் |
ஹிந்தி படங்களில் நடித்து வந்தபோது மும்பையில் குடியிருந்த பிரியங்கா சோப்ரா, 2018ல் நிக் ஜோனசை திருமணம் செய்து கொண்ட பிறகு லாஸ் ஏஞ்சல்ஸில் குடியேறினார். என்றாலும் மும்பையில் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்திருந்தார். பின்னர் ஹாலிவுட் படங்களில் நடித்து வந்த பிரியங்கா சோப்ரா, தற்போது மகேஷ் பாபு நடிப்பில் ராஜமவுலி இயக்கி வரும் புதிய படத்தில் நடித்து வருகிறார்.
ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நடைபெற்ற இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டவர், ராஜமவுலி கால்ஷீட் கேட்கும் போதெல்லாம் கொடுத்து நடிக்க போகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைவதற்கு இரண்டு ஆண்டுகள் ஆகும் என்று கூறுகிறார்கள். இந்த நிலையில் தற்போது மும்பையில் உள்ள தன்னுடைய 13 கோடி மதிப்புள்ள அடுக்குமாடி குடியிருப்புகளை விற்பனை செய்திருக்கிறார் பிரியங்கா சோப்ரா. இதுகுறித்த செய்திகள் பாலிவுட்டில் வெளியாகியுள்ளது.